நீச்சல் குளத்தில் சதா வெளியிட்ட புகைப்படம் – இப்பவும் அப்படியே நச்சுனு இருக்காங்களே.

0
6981
sadha
- Advertisement -

சினிமாவை பொறுத்த வரை ஒரு ரவுண்டு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட எத்தனையோ நடிகர் நடிகைகள் சினிமாவில் அட்ரஸ்ஸே இல்லாமல் போய் விடுகிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக திகழ்ந்த சதாவும் ஒருவர். தமிழில் ஜெயம்ரவி நடிப்பில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான ‘ஜெயம்’ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சதா. அதன் பின்னர் விக்ரம், அஜித்,மாதவன் என்று முன்னனி நடிகர்களுடன் நடித்துவந்தார். பல புது முக நாயகிகளின் வருகையால் பட வாய்ப்பை இழந்த சதா கடைசியாக வடிவேலு நடித்த ‘எலி ‘ படத்தில் கதாநாயகியாக நடித்தார். 

-விளம்பரம்-

அந்த படத்திற்கு பின்னர் இவருக்கு தமிழில் இருக்கும் முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இடையில் எதிர் பார்த்த அளவு பட வாய்ப்புகள் இல்லாமல் போக தொலைக்காட்சி பக்கம் சென்ற சதா, தி ஜூனியர்ஸ், ஜோடி போன்ற நிகழ்ச்சிகளில் நடுவராக பங்குபெற்றார். ஆனால், அங்கும் நிலைத்து நிற்க முடியவில்லை.

- Advertisement -

பின்னர் நீண்ட இடைவேளைக்கு தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்த நடிகை சதா, கடைசியாக இயக்குனர் மஜித் இயக்கிய ‘டார்ச்லைட் ‘ என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ள நடிகை ரித்விகா, தினேஷ்குமார், சுஜாதா போன்ற பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். ஆனால், அந்தப் படமும் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை.

This image has an empty alt attribute; its file name is sadha-1-753x1024.jpg

தற்போது மீண்டும் பட வாய்ப்புகள் இல்லாமல் அதோ கதியாக இருந்து வருகிறார். இந்நிலையில் நடிகை சதா கவர்ச்சியான சில புகைப்படங்கள் சமூக வளைத்தளத்தில் வெளியாகியுள்ளது. அதில் நீச்சல் குளத்தில் கூலிங் கிளாஸ் அணிந்த படி படு ஸ்டைலிஷாக இருக்கிறார் சதா.

-விளம்பரம்-
Advertisement