ட்ராபிக் அதிகம் இருந்ததால் சாய் பல்லவி எடுத்த அதிரடி முடிவு ! புகைப்படம் உள்ளே

0
1541
- Advertisement -

ஒரே படத்தின் மூலம் ஓஹோ என வளர்ந்தவர் நடிகை சாய் பல்லவி. பிரேமம் என்ற படத்தில் அவர் செய்த மலர் டீச்சர் கேரக்டர் அவரை தற்போது தென்னிந்திய சினிமாவில் சுற்றி சுற்றி நடிக்க வைத்து வருகிறது.

-விளம்பரம்-

Actress-sai-pallavi

- Advertisement -

தமிழில் வெங்கட்பிரபு இயக்கும் சூர்யாவின் NGK படத்தில் நடித்து வருகிறார். மேலும், மாரி படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார் சாய் பல்லவி. அதனை தாண்டி தமிழில் ‘கரு’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் தெலுங்கிலும் தயாராகி வருகிறது. தெலுங்கில் ‘கணம்’ என தயாராகி உள்ள இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் விழா நேற்று நடந்தது. இந்த விழாவிற்கு வேகமாக செல்ல முயற்சித்த சாய் பல்லவிக்கு டிராபிக் ஜாம் தலைவலியை கொடுத்தது.

உடனே சாமர்த்தியமாக யோசித்த சாய் பல்லவி தன் உதவியாளரின் பைக்கில் ஏறி விழா நடைபெரும் இடத்தை அடைந்தார். தன் உதவியாளருடன் பைக்கில் செல்லும் இந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement