பிரேமம் படத்தில் அறிமுகமான சாய் பல்லவி அந்த படத்திற்கே 50 லட்சம் சம்பளம் வாங்கியுள்ளார்.பல அறிமுக நாயகிகள் தனது முதல் படத்திற்கு 15 முதல் 20 லட்சம் சம்பளம் மட்டுமே வாங்குவார்கள்.ஆனால் தற்போது இதைவிட அதிர்ச்சியாக சாய் பல்லவி தனது சம்பளத்தை மலை போல் உயர்த்தியுள்ளர்.தெலுகு நடிகர் சர்வானந்துடன் நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் நடிக்கும் சாய் பல்லவி அந்த படத்தில் நடிக்க ரூ. 1.5 கோடி சாய் சம்பளம் வாங்கியிருப்பதாக ஒரு பரபரப்பு செய்தி வெளியாகியிருக்கிறது.
வெறும் 2 3 படங்களில் நடித்த சாய் பல்லவிக்கு பல முன்னணி நடிகைகள் வாங்கும் சம்பளத்திற்கு இணையாக சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதை அறிந்த அனைத்து கோலிவுட் நடிகைகளும் அதிர்ச்சியில் உள்ளனர்.ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.உண்மையில் சாய் பல்லவி இவ்வளவு சம்பளம் வாங்குகின்றாரா என்று அவர் சொன்னால் தான் தெரியும்.




