திருமணத்திற்கு பின்னர் இவர் நடித்த அனைத்து படங்களும் ஹிட்டாக பின்னர் இவருக்கு தொடர்ச்சியாக தமிழ்,தெலுகு என்று பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கிறது. தற்போது தமிழில் சிவகார்த்திகேயன் நடிக்கும் சீமராஜா படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
ஏற்கனவே சிவ\கார்த்திகேயன் நடித்த "ரஜினி முருகன்" படத்தை இயக்கிய பொன்ராம் இந்த படத்தை இயக்கியுள்ளார். தற்போது இந்த படத்தை பற்றிய ஒரு ஸ்வாரஸ்யமான சிறு தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிகை சமந்தாவை "குந்தாணி" என்ற பட்டப்பெயர் வைத்து அழைப்பர் என்று சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகிறது.
மேலும், இந்த படம் வரும் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என்று எதிர்பார்கபடுகிறது. பொதுவாக பொன்ராம் படத்தில் காமெடிக்கு பஞ்சமே இருக்காது. மேலும், இதற்கு முன்னாள் பொன்ராம் மற்றும் சிவகார்த்திகேயன் கூட்டணியில் ஏற்கனவே வெளி வந்த இரு படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.




