பீஸ்ட் படத்தில் சமந்தாவா? வைரலாகும் அவரின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி, ஷாக்கான ரசிகர்கள்.

0
426
beast
- Advertisement -

பீஸ்ட் படத்தில் சமந்தா இருப்பது குறித்து சோசியல் மீடியாவில் பல தகவல்கள் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருடைய படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. கடைசியாக விஜய் நடித்த மாஸ்டர் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து தற்போது தளபதி விஜய் அவர்கள் நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ என்ற படத்தில் நடித்து இருக்கிறார். மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள்.

-விளம்பரம்-

இந்த படத்தில் அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து இருக்கிறார். மேலும், இந்த படத்தின் அரபிக்குத்து பாடல், ஜாலியோ ஜிம்கானா வெளியானதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதுமட்டும் இல்லாமல் இந்த பாடலுக்கு ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் நடனமாடி வீடியோக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார்கள். இந்த பாடல் வெளியிட்டு மில்லியன் பார்வையாளர்களுக்கு மேல் சென்று சாதனை படைத்துள்ளது. தற்போது இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றது.

- Advertisement -

பீஸ்ட் படத்தின் ட்ரைலர்:

இந்த படத்தில் விஜய் ‘வீர ராகவன்’ என்ற பெயரில் நடித்து இருக்கிறார். அதோடு பீஸ்ட் படம் வருகிற ஏப்ரல் 13 ஆம் தேதி உலகமெங்கும் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் தான் வெளியாகி இருக்கிறது. ட்ரெய்லரில் ஒரு மால்லை பயங்கரமான தீவிரவாதிகள் ஹைஜாக் பண்ணுகிறார்கள். ட்ரெய்லர் ஆரம்பத்தில் செல்வராகவன் கதை சொல்வது போல் காண்பிக்கிறார்கள். இந்திய உளவுத்துறையில் விஜய் பணிபுரிந்து வருகிறார். எதர்ச்சையாக கடத்தப்படும் மால் ஒன்றில் விஜயும் சிக்கிக் கொள்கிறார்.

beast

பீஸ்ட் படத்தின் கதை:

அப்போது அரசாங்கத்திற்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடக்கிறது. கடத்தப்பட்ட மாலில் தனது துறையை சேர்ந்த ஸ்பை வீர ராகவன் இருப்பதை அறிந்து அவரிடம் மால்லையும் மக்களையும் காப்பாற்றும் பொறுப்பை செல்வராகவன் ஒப்படைக்கிறார். இந்த கடத்தலில் விஜய் எப்படி மக்களைக் காப்பாற்றினார்? இதன் பின்னணி என்ன? என்பது தான் படத்தின் சுவாரஸ்யமே என்று கூறப்படுகிறது. கிட்டத்தட்ட ட்ரெய்லரின் மூலமே பீஸ்ட் படத்தின் கதையை சொல்லி இருக்கிறார்கள். மேலும், ட்ரைலர் வெளியானதில் இருந்தே வணிக வளாகத்தின் செட் ஒர்க் பற்றி சோஷியல் மீடியாவில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-

நடிகை சமந்தா பதிவிட்ட இன்ஸ்டாகிராம் ஸ்டோரி:

இந்த நிலையில் கடந்த ஆண்டு நடிகை சமந்தா பதிவிட்ட இன்ஸ்டாகிராம் ஸ்டோரி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், அந்த ஸ்டோரில் பீஸ்ட் படத்தின் மால் செட் இடம்பெற்றிருந்தது. அந்த சமயத்தில் இதனை பற்றி யாருக்கும் தெரியாததால் யாரும் சமந்தாவை கண்டு கொள்ளவில்லை. ஆனால், தற்போது பீஸ்ட் படத்தின் டிரைலர் வெளியானதைத் தொடர்ந்து சமந்தா பதிவிட்ட இன்ஸ்டாகிராம் ஸ்டோரி அதிகமாக பேசப்பட்டு வருகிறது. மேலும், இது குறித்து பலரும் பலவிதமாக கருத்துக்களை போட்டு வருகிறார்கள்.

பீஸ்ட் படத்தில் சமந்தாவா:

அதிலும் சிலர், ஒருவேளை பீஸ்ட் படத்தில் சமந்தா நடித்துள்ளாரா? என்ற சந்தேகமும் தற்போது எழுந்துள்ளது. ஆனால், அந்த சமயத்தில் சமந்தா பீஸ்ட் பட செட் அருகில் உள்ள ஹோட்டலில் தங்கி இருந்ததால் எதர்ச்சையாக இதனை பதிவிட்டார் என்று கூறப்படுகிறது. இன்னொரு தரப்பினர் ஒருவேளை சஸ்பென்சாக படத்தில் சமந்தா இருந்தாலும் ஆச்சரியத்திற்கு பஞ்சம் இல்லை என்றும் கூறினர். உண்மையிலேயே சமந்தா படத்தில் இருக்கிறாரா? இல்லையா? என்பது படம் வெளியான பிறகு தான் தெரியும். ஏற்கனவே சமந்தா அவர்கள் விஜயுடன் சேர்ந்து கத்தி, மெர்சல், தெறி போன்ற படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement