நாயகியின் ரீல்ஸ் கூட செய்ய முடியாத சாதனை செய்த சமந்தா – கேலி செய்த பூஜாவிற்கு பாடம் கற்பிக்க தான் அரபிக் குத்து ரீல்ஸ்ஸா ?

0
545
- Advertisement -

தற்போது உலகம் முழுவதும் விஜய்யின் அரபிக்குத்து பாடல் தான் பயங்கர ட்ரெண்டிங் ஆகி கொண்டு இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் தளபதி விஜய். மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் அவர்கள் தற்போது பீஸ்ட் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. மேலும், இவர்களுடன் இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து இருக்கிறார். இந்த படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த படத்தின் அரபிக்குத்து பாடல் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

இந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியிருக்கிறார். விஜய்யின் அரபிக் குத்து பாடல் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இந்த பாடல் வெளியானதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. மேலும், உலகம் முழுவதும் தற்போது விஜயின் அரபி குத்து பாடல்கள் ஒலித்துக்கொண்டு இருக்கிறது. ஒரே வாரத்தில் 70 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து 100 மில்லியன் பார்வையாளர்களை நெருங்க இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் அரபி குத்துப்பாடல் வெளியானதிலிருந்து ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் அரபிக்குத்து பாடலுக்கு நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

- Advertisement -

ஏர்போர்ட்டில் அரபி குத்து பாடலுக்கு நடனமாடிய சமந்தா:

அந்த வகையில் நடிகை சமந்தாவும் ஏர்போர்ட்டில் அரபி குத்து பாடலுக்கு செம குத்து போட்டிருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதோடு இந்த வீடியோவை நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு விமானம் தாமதம் ஆகிவிட்டது என்று குறிப்பிடுகிறார். விமானம் தாமதமான நேரத்தில் தான் சமந்தா இந்த டான்ஸை போட்டிருப்பதாக மறைமுகமாக தெரிவிக்கிறார். இதனை தொடர்ந்து இந்தப் பாடலுக்கு ஏர்போர்ட்டில் நடனம் ஆனது திட்டமிடப்பட்டதா? இல்லை அப்படியே ஸ்பாட்டில் நடந்தது தானா? என்று ரசிகர் ஒருவர் கேள்வி கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த சமந்தா, நான் ஏர்போர்ட்டிற்கு செல்லும் வழியில்தான் அந்த பாடலை பார்த்தேன்.

அரபிக்குத்து பாட்டுக்கு நடனமாடிய பூஜா ஹெக்டே:

அதை பார்த்து உற்சாகம் அடைந்ததால் நான் அதைச் செய்தேன். இது திட்டமிட்ட விஷயம் கிடையாது என்று கூறி இருந்தார். இவருடைய நடனத்திற்கு ரசிகர்கள் பலரும் லைக்ஸ்குகளை குவித்து வருகிறார்கள். அதேபோல் பீஸ்ட் படத்தின் கதாநாயகி பூஜாவும் அரபிக்குத்து பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ போட்டு இருந்தார். அதுமட்டும் இல்லாமல் நடிகை பூஜா ஹெக்டே சமீபத்தில் சமந்தா குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டேட்டஸ் ஒன்றை வைத்திருந்தார். அதில் , எனக்கு ஒன்றும் இவர் எந்த விதத்திலும் அழகாக தெரியவில்லை’ என்று பதிவிட்டிருந்தார். நடிகை பூஜா ஹெக்டேவின் இந்த பதிவு சமந்தா ரசிகர்களை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியது.

-விளம்பரம்-

சமந்தாவை விமர்சித்த பூஜா ஹேக்டே:

ஆனால், சமந்தா அதை கண்டுகொள்ளாதீர்கள் என்று கூறினார். இருப்பினும் சமந்தா மற்றும் பூஜா ரசிகர்கள் மத்தியில் பணிப்போர் நடந்து கொண்டு தான் இருந்தது. இப்படி ஒரு நிலையில் சமந்தா பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பெரும் வைரலானது. சொல்லப்போனால் பூஜா ஹேக்டே அரபிக் குத்து ஸ்டெப்ஸ் போட்டு வெளியிட்ட வீடியோவை விட சமந்தாவின் வீடியோ தான் அதிக லைக்ஸ்களை பெற்று வருகிறது. இதனால் சமந்தாவின் அரபிக் குத்து வீடியோவை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட பூஜா ஹேக்டே ‘Amazee’ என்று பதிவிட்டுள்ளார்.

பூஜாவை மிஞ்சிய சமந்தாவின் ரீல்ஸ்:

இதன் மூலம் சமந்தா மற்றும் பூஜா ஹேக்டே இருவருக்கும் இடையிலான பனிப் போர் ஒரு முடிவுக்கு வந்து இருக்கிறது. அதே போல தன்னை விமர்சித்தாலும் அவரது பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்ட சமந்தாவின் பெருந்தன்மையையும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் தற்போது 33 மில்லியனுக்கும் மேல் சமந்தாவின் அரபிக்குத்து ரீல்ஸ் தான் அதிகமாக உள்ளது. இதுவரை போட்ட ரீல்ஸ்களிலேயே அதிகம் பார்க்கப்பட்டது சமந்தா உடைய வீடியோ தான். அதோடு இந்த படத்தின் நடிகை பூஜாவை விட சமந்தாவின் ரீல்ஸ் தான் அதிகம் கடந்து உள்ளது. இதை ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகிறார்கள்.

Advertisement