ஈஷா யோகாவில் கலைக்கட்டிய சிவராத்திரி – ஆஜரான சமந்தா. செல்லமாக கில்லிய சத்குரு. வைரலாகும் வீடியோ.

0
4587
sam
- Advertisement -

இந்தியா முழுவதும் நேற்று இரவு மஹா சிவாரத்திரி கொண்டாடடப்பட்டது. முக்கியமாக கோவையில் உள்ள ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையம் சார்பில் மிகப்பெரிய சிவராத்திரி விழா முன்னெடுக்கப்பட்டது. ஈஷா யோகா மையம் துவங்கப்பட்ட நாளில் இருந்தே ஆண்டு தோறும் இங்கே சிவ ராத்திரி பூஜை கோலாகளமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதே போல சிவராத்திரி பூஜை என்ற பெயரில் இங்கே நடக்கும் கூத்துக்குள் கொஞ்சம் நஞ்சம் இல்லை.

-விளம்பரம்-

அந்த வகையில் நேற்றும் ஈஷா யோகா மையத்தில் சிவராத்திரி பூஜை படு கோலாகளமாக நடைபெற்றது. இதில் பல்வேறு சிவ பகதர்கள் கலந்து கொண்டனர். அதே போல தென்னிந்திய சினிமாவில் உள்ள பல்வேறு நடிகைகளும் சத்குருவின் பக்கதர்களாக தான் இருந்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக தமன்னா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சமந்தா என்று பல்வேறு நடிகைகள் சத்குருவின் மிகுந்து பக்தைகள் தான்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக இவர்கள் அனைவரும் சிவராத்திரி பூஜைகளில் தவறாமல் விசிட் அடித்துவிடுவார்கள். அந்த வகையில் நேற்று நடைபெற்ற சிவராத்திரி கொண்டாடத்தில் சமந்தாவும் கலந்து கொண்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் சமந்தாவை பார்த்த சத்குரு ஏதோ பேசிவிட்டு அவரை செல்லமாக கில்லியுள்ளார்.

பின்னர் பக்த்தர்களோடு பக்தர்களாக சமந்தா ஆடி பாடி மகிழ்ந்துள்ளார். சமந்தா மட்டும் கிடையாது இந்த சிவராத்திரி பூஜையில் நடிகை ரகுல் ப்ரீத் சிங், லட்சுமி மஞ்சு ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர். ஆனால், சத்குருவின் மற்றொரு பக்தையான காஜல் அகர்வால் இந்த சிவராத்திரி பூஜையில் கலந்துகொண்டாரா இல்லையா என்பது தெரியவில்லை. திருமணம் ஆனதால் அவரது கணவர் விடலையோ ?

-விளம்பரம்-
Advertisement