-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

டைமண்ட் பாதிக்கப்பட்ட வாட்ச் – சமந்தா கையில் கட்டி இருக்கும் வாட்ச்சின் விலை எவ்வளவு தெரியுமா?

0
121

சமந்தாவின் ரீசன்ட் புகைப்படத்தில் அவர் அணிந்திருக்கும் வாட்ச் குறித்த விவரம் தான் தற்போது இணையத்தின் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் 11 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னனி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் சமந்தா. இவரது நடிப்பில் வெளியான பல படங்கள் மாபெரும் ஹிட் அடித்தது. பல இவர் லீட் ரோலில் நடித்த படங்கள் அனைத்தும் எதிர்பார்த்த அளவில் வெற்றிபெறவில்லை.

-விளம்பரம்-

குறிப்பாக கடந்த ஆண்டு இவர் லீட் ரோலில் நடித்த யசோதா மற்றும் சாகுந்தலம் ஆகிய இரண்டு படங்களும் மாபெரும் தோல்வியை தழுவியது. ஆனால், சமீபத்தில் விஜய் தேவர்கொண்டாவுடன் சமந்தா நடித்த படம் குஷி. காதல் ஆக்ஷன் திரைப்படமாக உருவான இந்த படம் ஓரளவிற்கு வரவேற்பை பெற்றது. சமந்தாவிற்கு இது ஒரு கம்பேக் படமாக அமைந்து இருந்தது. இதனிடைய சமந்தா அவர்கள் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சமந்தா குறித்த தகவல்:

இவர்கள் இருவரும் பிரபலமான ஜோடிகளாக வலம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில வருடங்களுக்கு முன்பே இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து இவர்கள் பிரிந்து விட்டார்கள். விவாகரத்திற்கு பிறகு சமந்தா தன்னுடைய கேரியரில் அதிக கவனம் செலுத்தி நடித்து வந்தார். இது ஒருபுறம் இருக்க, கடந்த இரண்டு வருடம் ஆகவே சமந்தா அவர்கள் மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அவஸ்தை பட்டு இருந்த தகவல் அனைவரும் அறிந்ததே.

மயோசிடிஸ் நோய்:

-விளம்பரம்-

இது ஒரு வகையான தசைய அலர்ஜி நோய் என்று கூறப்படுகிறது. இதற்காக இவர் தொடர் சிகிச்சை எடுத்து வந்தார். ஆனால், அந்த நோயிலிருந்து சமந்தா பூரணமாக குணமடையவில்லை. மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன் அந்த நோயின் தாக்கம் அதிகமாகி இருப்பதால் தான் நடிக்க ஒப்புக்கொண்ட படங்களுக்கு வாங்கிய அட்வான்ஸ் தொகையை திருப்பிக் கொடுத்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் ஒரு வருடத்திற்கும் மேலாக சினிமாவை விட்டு விலக சமந்தா முடிவு எடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

சமந்தா உடல்நிலை:

பின் சமந்தா தீவிரமாக சிகிச்சை எடுத்து இருந்தார். அது மட்டும் இல்லாமல் மன நிம்மதிக்காக சமந்தா சுற்றுப்பயணம் சென்று இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் தற்காலிகமாக சினிமாவில் இருந்து விலகி இருந்த சமந்தா அவர்கள் தற்போது பூரணமாக குணமடைந்து ஆரோக்கியமான உடல் நலத்துடன் இருக்கிறார். மீண்டும் இவர் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும், பாலிவுட், பாலிவுட், கோலிவுட் என அனைத்து மொழி படங்களிலும் நடிப்பதற்கு சமந்தா ஆர்வமாக காட்டியிருக்கிறார்.

சமந்தா வாட்ச் விலை:

அது மட்டும் இல்லாமல் சமந்தா சோசியல் மீடியாவிலும் படு ஆக்டிவாக இருக்கிறார். இந்த நிலையில் சமந்தாவின் லேட்டஸ்ட் புகைப்படம் தான் தற்போது இணையத்தில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதில் அவர் கையில் அணிந்திருந்த வாட்சை தான் பேசும் பொருளாகி இருக்கிறது. இந்த வாட்ச் சமீப காலமாகவே பிரபலங்கள் பலருமே பயன்படுத்தி வருகிறார்கள். இந்த வாட்சின் பெயர் ரோலக்ஸ் ஆய்ஸ்டர் பெர்பெச்சுவல் 36. இந்த வாட்சில் வைரம் பதிக்கப்பட்டு இருக்கிறது. இது ஸ்பைரல் பிரேஸ்லெட்-ஸ்டைல் ​​பேண்ட் மற்றும் சில்வர் ஓபலைன் டயல் கொண்டது. இந்த வாட்ச் Serpenti Spiga. இது சமந்தாவின் பேவரட் வாட்ச். இதனுடைய ஆரம்ப விலை 70 லட்சம் ஆகும். தற்போது இந்த வாட்ச் தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் சமீபத்தில் நடந்து முடிந்த இயக்குனர் சங்கர் மகளின் திருமணத்தில் கூட நயன்தாரா இந்த வாட்சை அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news