நீங்க ஜாலியா இருக்க மாற்றீங்கனு சொன்னார் – அதன் பின்னர் அவர் படத்தில் நான் நடிக்கவே இல்லை. சமீரா ரெட்டிக்கு நடந்த கொடுமை.

0
1857
Actreaa-sameera-reddy
- Advertisement -

தமிழ் சினிமா ரசிகர்களை தனது முதல் படத்திலேயே தனது வசீகரமான முகத்தின் மூலம் கவர்ந்தவர் நடிகை சமீரா ரெட்டி.தமிழில் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ‘வாரணம் ஆயிரம்’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் சமீரா ரெட்டி.  இளமையான தோற்றம் வசீகரமான முகம் என்று இருந்ததால் அதன் பின்னர் வேட்டை, அசல். நடுநிசி நாய்கள் என சில படங்களில் நடித்தார்.தமிழ் சினிமாவிற்கு வருவதற்கு முன்பாகவே இந்தியில் பல படங்களில் நடித்து வந்தார் சமீரா ரெட்டி.

-விளம்பரம்-
Image result for sameera reddy

இறுதியாக கன்னடத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘வரதநாயகா’ என்ற படத்தில் நடித்துவிட்டு சினிமாவிகற்கு முழுக்கு போட்டுவிட்டார்.சமீரா ரெட்டி கடந்த 2014 ஆம் ஆண்டு அக்ஷய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சமீரா பேசுகையில், தான் பிஸியாக நடித்து வந்த நிலையில் திடீரென நடிப்பிலிருந்து விலகினேன். ஆனால் தான் ஏன் சினிமாவிலிருந்து விலகினேன் என யாரும் கண்டு கொள்ளவில்லை.இது தான் சினிமா என அறிந்து கொண்டேன்.

- Advertisement -

நான் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று அந்த படத்தில் முத்தக் காட்சி இருக்கும் என்று கூறினார்கள். ஆனால், அதை நான் ஒத்துக்கொள்ளவில்லை. உடனே அவர்கள் நீங்கள் முசபீர் படத்தில் முத்த காட்சியில் நடித்தீர்களே என்று சொன்னார்கள். அதற்கு நானும் ‘ஆமாம் நடித்தேன் தான் அதனால் எல்லா படத்திலும் அப்படியே நடிக்க முடியுமா என்று சொன்னேன்’

அதற்கு அவர்களும் கொஞ்சம் கவனமாக இருங்கள் உங்களைப் போன்று வேண்டுமானாலும் நாங்கள் மாற்றலாம் என்று கூறினார்கள். இதே போல ஒரு ஹீரோவுடன் நான் நடித்துக் கொண்டிருக்கும் போது உங்களுடன் நடிப்பது மிகவும் போராக இருக்கிறது நீங்கள் ஜாலியாக இருக்க மாட்டீர்கள். இந்த படத்திற்கு பின்னர் நான் உங்களுடன் நடிப்பேனா என்பது தெரியவில்லை என்று சொன்னார். அதன் பின்னர் அவருடன் நான் நடிக்கவே இல்லை.

-விளம்பரம்-
Advertisement