பூங்காவில் அரை குறை ஆடையில் ஆட்டம் போட்டதாக தாக்கிய நபர் – கோமளி பட நடிகை வெளியிட்ட ஷாக்கிங் வீடீயோ.

0
1451
samyuktha
- Advertisement -

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். அதிலும் இந்த படத்தில் ஜெயம் ரவி பள்ளி மாணவராக வரும் பகுதியில் ஜெயம் ரவிக்கு காதலியாக முதல் பாதி முழுதும் தோன்றிய இவர் ரசிகர்களின் மனத்தில் இடம் பிடித்தவர நடிகை சம்யுக்தா. கோமாளி படத்தில் காஜல் அகர்வாலை விட இவர் தான் ரசிகர்களை அதிகம் கவர்ந்திருந்தார். கோமாளி படத்தை தொடர்ந்து “பப்பி” என்ற படத்தில் நடித்தார்.

-விளம்பரம்-

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்களையும் விடீயோக்களையும் பதிவிடுவது வழக்கம். இப்படி ஒரு நிலையில் இவர் சமீபத்தில் தனது நண்பர்களுடம் பூங்கா ஒன்றிற்கு சென்ற போது அங்கே இருந்த சிலர் இவர் ஆபாசமாக உடை அணிந்து கூத்தடிப்பதாக கூறி பிரச்சனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இவருடன் சென்ற இவரது நண்பர்களையும் தாக்கி உள்ளனர்.

- Advertisement -

அப்போது சம்யுக்தாவிற்கும் அங்கே இருந்த சிலருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. அதை வீடியோவாக வெளியிட்டு உள்ளார் சம்யுக்தா. அந்த வீடியோவில் சம்யுக்தா பேசி கொண்டு இருக்கும் போது பெண் ஒருவர் சம்யுக்தா அரை குறை ஆடையில் ஆட்டம் போடுவதாக கூறியிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த சம்யுக்தா தனது ஆடையை அவிழ்த்து, தான் ஸ்போர்ட்ஸ் உடையை போட்டு இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

இப்படி ஒரு நிலையில் நடிகை சம்யுக்தா மற்றும் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில் சம்யுக்தா மற்றும் அவரது நண்பருளுடன் பெண் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டு இருக்கிறார். இந்த சம்பவத்தை சம்யுக்தா வீடியோ எடுத்துக்கொண்டு இருக்கும் போது அந்த பெண் திடீரென்று சம்யுக்தாவின் தோழி ஒருவரை தாக்கி இருக்கிறார். அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement