அடையாளம் தெரியாமல் மாறிப்போன தளபதி நடிகை சங்கவி ! புகைப்படம் உள்ளே !

0
6684
Shangavi
- Advertisement -

நடிகை சங்கவி 1977ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி கர்நாடகா மாநிலத்தில் மைசூரில் பிறந்தவர். இவருடைய உண்மையான பெயர் காவியா ரமேஷ். இவருடைய பாட்டி ஒரு கன்னட நடிகை. தனது 16 வயதில் அஜித்தின் அமராவதி படத்தில் நடித்து பிரபலம் ஆனார். அந்த படமே இவருக்கு அறிமுக படமாக இருந்தது.
sangavi

-விளம்பரம்-

sangavi-actors

- Advertisement -

sanghavi

sanghavi-actress
அதன் பின்னர் இவருடைய நடிப்பு திறமையால் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழி படங்களிலும் 95 படங்களுக்கு மேல் நடித்தார். விஜய், அஜித், ரஜினி, விஜயகாந்த், கமல் சரத்குமார், பிரபு, சத்யராஜ் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்தவர் சங்கவி.

-விளம்பரம்-

அஜித்துடன் அமராவதி, விஜயுடன் கோயமுத்தூர் மாப்பிள்ளை, ரசிகன், விஷ்ணு, நிலாவே வா உள்ளிட்ட படங்களில் நடித்தார். தனுசின் சுள்ளான் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருப்பார். அவருக்கு வயது 30யை தாண்டியவுடன் பட வாய்ப்புகள் குறைந்தது. இருந்தும் கோகுலத்தில் சீதை, சாவித்ரி ஆகிய சீரியல்களிலும் நடித்தார் சங்கவி.

அதுவரை திருமணம் செய்யாமல் 22 வருடங்கள் சினிமாவில் மட்டுமே கழித்த சங்கவி 2016ஆம் ஆண்டு தனது 39 வயதில் ஒரு ஐ.டி கம்பெனி ஒனருடன் பெங்களூரில் திருமணம் செய்துகொண்டார்.
sanghavi marriage
கடைசியாக 2010ல் இந்திராணி என்ற தெலுங்கு படத்தில் நடித்த அவர் தற்போது சமுத்திரகனியுடன் கொளஞ்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் பெரிய திரையில் நடிக்க வருகிறார் சங்கவி. இந்த படத்தில் சமுத்திரகனிக்கு மனைவியாக நடிக்கிறார். இந்த கதை மிகவும் பிடித்த இருந்ததால் நடித்திருக்கிறேன் எனவும் கூறியுள்ளார் சங்கவி.

Advertisement