பாத்தே ரொம்ப நாள் ஆச்சி எப்படி இருக்கீங்க - குழந்தை பிறந்த பின் சயீஷா வெளியிட்ட முதல் புகைப்படம்.
தமிழ் சினிமாவில் உள்ள எத்தனையோ நடிகர் நடிகைகள் திருமணம் செய்து கொண்டு இருக்கின்றனர். அஜித் - ஷாலினி, சூர்யா - ஜோதிகா, பிரசன்னா - ஸ்னேகா என்று இப்படி சொல்லிகொண்டே போகலாம். அந்த வகையில் ஆர்யா - சயீஷா ஜோடியும் ஒருவர். தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக விளங்கி வரும் நடிகர் ஆர்யா – நடிகை சயிஷாவை திருமணம் கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் தேதி படு கோலாகலமாக நடைபெற்றது.
தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான வனமகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாய்ஷா. இவர், ஆர்யாவுடன் கஜினிகாந்த் படத்திலும் நடித்துள்ளார்.இந்த படத்தின் போது இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. ஆர்யாவிற்கு திருமணம் செய்து வைக்க கலர்ஸ் தொலைக்காட்சியில் 'எங்க வீட்டு மாப்பிள்ளை' என்ற நிகழ்ச்சி கூட நடைபெற்றது.
இதையும் பாருங்க : சினிமா வாய்ப்பால் விலகிய அகில் - இனி பாரதி கண்ணம்மாவில் இவர் தான் புதிய அகில். யார் பாருங்க.
ஆனால், அந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற எந்த பெண்ணையும் திருமணம் செய்துகொள்ளவில்லை ஆர்யா. இருப்பினும் 38 வயதில் 21 வயதான சாயிஷாவை திருமணம் செய்த்துக்கொண்டார். இவர்கள் இருவரும் காதலித்த சில மாதத்திலேயே திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு பின்னரும் இருவரும் ஒன்றாக டெடி படத்தில் கூடநடித்து இருந்தனர்.
திருமணத்திற்கு பின்னர் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகை சயீஷாவிற்கு கடந்த ஜூலை மாதம் பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பின் தன் எந்த ஒரு லேட்டஸ்ட் புகைப்படத்தையும் வெளியிடாமல் இருந்த சயீஷா, சமீபத்தில் பார்த்தே ரொம்ப நாள் ஆச்சி என்று ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் குழந்தையை பற்றி கேட்டு வருகின்றனர்.