சினிமா வாய்ப்பால் விலகிய அகில் – இனி பாரதி கண்ணம்மாவில் இவர் தான் புதிய அகில். யார் பாருங்க.

0
8131
Akilan
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல் தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்துள்ளது.சின்னத் தம்பி பெரியதம்பி, ராஜா ராணி, மௌன ராகம், கடைக்குட்டி சிங்கம் என்று சினிமா டைட்டில்களை வைத்து ஒளிபரப்பாகி வந்த சீரியல்கள் நல்ல வெற்றியை பெற்றது. அந்த வகையில் இதே பாணியில் சினிமா டைட்டிலை வைத்து ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரப்பேற்பை பெற்று வருகிறது. அதிலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த சீரியலின் TRP வேற லெவலில் எகிறியது.

-விளம்பரம்-

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த சீரியலில் அஞ்சலி என்ற வேடத்தில் நடிக்கும் நடிகை ஸ்வீட்டி தனது இன்ஸ்டா பக்கத்தில் உடன் நடிக்கும் அகீலனை டாக் செய்து இனி இதுபோன்ற எடிட்டை மிஸ் செய்வோம் என பதிவு செய்து இருந்தார்.அவர் போட்ட இந்த பதிவால் ஸ்வீட்டி அல்லது அகிலன் யாரோ சீரியலில் இருந்து வெளியேற போகிறார் என்று எதிர் பார்க்கப்பட்டது.

இதையும் பாருங்க : குக்கு வித் கோமாளி பிரபலம் டூ சமீபத்தில் டாடா காட்டிய விஜய் டிவி சீரியல் நடிகை வரை – 5 போட்டியாளர்களின் விவரம்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் இந்த தொடரில் இருந்து அகிலன் வெளியேறி இருந்தார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அகிலன், இதற்கான காரணத்தை கூறியுள்ளார். அதில், சீரியலில் இருந்து தானே தான் வெளியேறியதாக கூறி இருக்கிறார்.அதற்கு காரணம் தற்போது அவர் சினிமாவில் நடித்து வருகிறாராம்.

அவர் வெளியேறியதால் இனி அவருக்கு பதில் யார் வருவார் என்று ரசிகர்கள் பலர் ஆவலுடன் இருந்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் இன்று முதல் பாரதி கண்ணம்மாவின் புதிய அகிலன் என்ட்ரி கொடுத்துள்ளார். மேலும், இவர் பார்ப்பதற்க்கு ஒரு சாயலில் பழைய அகிலனை போல் தான் இருப்பதால் ரசிகர்கள் கொஞ்சம் ஆறுதல் அடைந்து உள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement