நீண்ட இடைவேளைக்கு பின்னர் இஸ்ட்டா புகைப்படம் மூலம் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ஷாலினி பாண்டே.

0
1117
shalini
- Advertisement -

தெலுகு சினிமாவின் லேட்டஸ்ட் ட்ரெண்டிங் ஹீரோவான விஜய் தேவர்கொண்டா நடிப்பில் கடந்த 2017 ஆண்டு வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. தெலுங்கில் இந்த படம் சூப்பர் ஹிட் ஆனதை தொடர்ந்து தமிழ், ஹிந்தி என்று பல்வேறு மொழிகளிலும் ரீ-மேக் செய்யப்பட்டது. ஆனால், அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்த ஷாலினி பாண்டேவிற்கு இணையாக வேறு யாரும் அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இல்லை என்பது தான் ராசிகர்களின் கருத்து. அந்த அளவிற்கு அந்த படத்தில் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார் ஷாலினி பாண்டே.

-விளம்பரம்-
https://www.instagram.com/p/CGXalFSBsX1/?igshid=1tersorffvujw

பப்லியான தோற்றம், சிரித்தால் கன்னத்தில் குழி விழும் அழகிய முகம் என்று தெலுங்கு சினிமாவில் நியூ எண்ட்ரியாக வந்த இவருக்கு தமிழ் சினிமாவிலும் ரசிகர் பட்டாளம் அதிகமாக துவங்கியது. கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ‘நடிகையர்திலகம் படத்தில் நடித்திருந்தார். மேலும், ஜி வி பிரகாஷுடன் ‘100% காதல்’ படத்தில் நடித்திருந்தார். ஆனால், அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற. தவறியது. தற்போது ஜீவாவுடன் ‘கொரில்லா’ படத்தில் நடித்து வருகிறார்.

- Advertisement -

மேலும், அனுஷ்கா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து சமீபத்தில் வெளியான ‘நிசப்தம்’ படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் ஷாலினி பாண்டே. தொடர்ந்து படத்தில் நடித்து வந்தாலும் அம்மணிக்கு ஹீரோயின் கதாபாத்திரம் கொஞ்சம் குறைவாக தான் இருக்கிறது. இதனால் அம்மணி மற்ற நடிகைகள் பயன்படுத்தும் கவர்ச்சி யுத்தியை தற்போது பயன்படுத்தி பட வாய்ப்புகளுக்கு வலை விரித்துள்ளார்.

This image has an empty alt attribute; its file name is 1-23.jpg

எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் அம்மணி தனது சமூக வலைதளத்தில் அடிக்கடி புகைப்படங்களை பதிவிடுவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தான் குளியல் தொட்டியில் எடுத்த புகைப்படம் ஒன்றை ஷாலினி பாண்டே வெளியிட்டிருந்தார்.

-விளம்பரம்-
Advertisement