மிஸ் இந்தியா 2022 போட்டியில் இருந்து திடீரென நெஞ்சுக்கு நீதி பட நடிகை விலகி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரவலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் உதயநிதி ஸ்டாலின். இவர் குருவி படத்தின் மூலம் தான் தயாரிப்பாளராக சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். பின் ஆதவன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி இருந்தார். அதை தொடர்ந்து இவர் ஹீரோவாக களம் இறங்கி இருந்தார்.

மேலும், இவர் நடிப்பில் வெளிவந்து இருந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதனை தொடர்ந்து உதயநிதி பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாமன்னன் என்ற படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கிறார். இதனை தொடர்ந்து சமீபத்தில் உதயநிதி நடிப்பில் வெளியாகியிருந்த படம் நெஞ்சுக்கு நீதி.

Advertisement

நெஞ்சுக்கு நீதி படம்:

இந்த படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் தான்யா ரவிச்சந்திரன், சிவானி ராஜசேகர், சுரேஷ் சக்ரவர்த்தி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். சுரேஷ் கபூர் இந்த படத்தை தயாரித்து இருக்கிறார். இது இந்தியில் வெளிவந்த ஆர்டிகள் 15 படத்தின் ரீமேக் படம் ஆகும். மேலும், படத்தில் முதன்முறையாக காவல் அதிகாரியாக உதயநிதி நடித்திருந்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

ஷிவானி ராஜசேகர்:

இந்நிலையில் நெஞ்சுக்கு நீதி பட நடிகை சிவானி ராஜசேகர் மிஸ் இந்தியா அழகி போட்டியில் இருந்து விலகி உள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, நெஞ்சுக்கு நீதி படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டவர் ஷிவானி ராஜசேகர். இவர் இதற்கு முன் ஹிப்ஹாப் தமிழா ஆதியின் அன்பறிவு படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் மூத்த நடிகர்கள் ராஜசேகர் மற்றும் ஜீவிதாவின் மகளாவார்.

Advertisement

அழகி போட்டியில் விலகிய ஷிவானி ராஜசேகர்:

நடிகை சிவானி ராஜசேகர் மிஸ் இந்தியா 2022 ஆம் ஆண்டிற்கான அழகி போட்டியில் தமிழகத்தை பிரதிநிதிபடுத்திருந்தார். ஆனால், தனது கல்லூரி தேர்வு காரணமாக இவர் மிஸ் இந்தியா போட்டியில் இருந்து வெளியேறி இருக்கிறார். இது குறித்து சிவானி ராஜசேகர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அந்த பதவில் அவர், மெடிக்கல் தேர்வுகள் மற்றும் மலேரியாவால் பாதிக்கப்பட்டதன் காரணமாக பெரும்பாலான பயிற்சி மற்றும் க்ரூமிங் அமர்வுகள் மற்றும் துணைப் போட்டிகளை நான் தவறவிட்டது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

Advertisement

இன்ஸ்டாவில் ஷிவானி ராஜசேகர் கூறியது:

விரைவில் மீண்டும் வருவேன் என்று எதிர்பார்த்தேன். ஆனால், எதுவும் நடப்பதாக தெரியவில்லை. எனது பிராக்டிகல் தேர்வுகள் தொடங்கிவிட்டன. மிஸ் இந்தியா கிராண்ட் ஃபினாலே தினமான ஜூலை 3 ஆம் தேதி அன்று எனக்கும் தேர்வு உள்ளது. எனவே கனத்த இதயத்துடன் நான் இனி ஃபெமினா மிஸ் இந்தியா பயணத்தில் இருக்க மாட்டேன் என்பதை தெரியப்படுத்துகிறேன். அதோடு எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி என்று கூறி இருக்கிறார். இப்படி இவர் கூறி இருக்கும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement