மீண்டும் களைக்கட்டும் விலங்குகள் இறைச்சி விற்பனை. சீனர்களைக் கழுவி ஊற்றிய பாலிவுட் நடிகை.

By Rajkumar · 3/4/2020

சீனாவில் தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது. ஒட்டுமொத்த உலகமும் அச்சத்தில் இருக்கும் நிலைமைக்கு முழுக்க காரணம் சீனா தான். உலகம் முழுவதும் பலியானவர்களின் எண்ணிக்கை 48000 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்கியுள்ளது. கொரோனா வைரஸால் இத்தாலி நாடு தான் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இத்தாலியில் கொரோனா வைரஸால் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

மேலும், இந்தியாவில் 2095 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டும், 58 பேர் பலியாகியும் உள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு செல்வதால் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார் பிரதமர் மோடி. உலகமே கொரோனா வைரஸை பார்த்து பயந்து கொண்டிருக்கும் நேரத்தில் சீனர்கள் பழையபடி கருமம், கன்றாவி கறியை சாப்பிடத் துவங்கி விட்டனர்.

இதையும் பாருங்க : தனக்கு கொரோனா இருப்பதாக பதிவிட்ட சூர்யா பட இயக்குனர். ரசிகர்களின் கமெண்டை பாருங்க.

முன்னதாகவே வவ்வாலில் இருந்து தான் மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் பரவியதாக தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவின் வுஹான் மாகாணத்தில் உள்ள சந்தையில் உணவுக்காக பாம்பு, நாய், எலி, தேள், கரப்பான் பூச்சி, வவ்வால், முதலைகள், எறும்புத் தின்னி, ஒட்டகம் உள்ளிட்ட 122 விலங்குகளின் இறைச்சிகள் உணவுக்காக விற்கப்படுகின்றன. இந்த இறைச்சி சந்தையில் ஏதோ ஒரு விலங்கில் இருந்து தான் இந்த கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு தொற்றியதாகக் கூறப்படுகிறது.

https://twitter.com/shraddhadas43/status/1244733132936327168

இந்த நிலையில் தற்போது சீனாவில் வைரஸ் தொற்று குறைந்து உள்ளது. மக்களும் தங்களுடைய இயல்பு வாழ்க்கை திரும்பி உள்ளார்கள். இந்த சூழ்நிலையில் சீனா சந்தைகளில் மீண்டும் இதே விலங்குகளை விற்கவும், வாங்கவும் தொடங்கி உள்ளதாக செய்திகள் வந்து உள்ளது. அதோடு வவ்வால்கள், பாம்பு, எட்டுக்கால்பூச்சி, பல்லி, தேள் ஆகியவற்றை சாப்பிட்டால் உடலுக்கு நல்லது என்று சீனர்கள் விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இதையும் பாருங்க : கொரோனாவுக்கும் எனக்கு என்ன சம்மந்தம் ? அருண் விஜய் பட நடிகையின் பேட்டி.

இதை அறிந்த பாலிவுட் நடிகை ஸ்ரத்தா தாஸ் அவர்கள் சீனர்களை தாக்கி கடுமையாக பேசிய கருத்தை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, கொரோனா வைரஸ் பரவலுக்குப் பிறகும் இப்படி வவ்வால், எலி, நாய்கள், கரப்பான் பூச்சி, முயல், தேள் இதையெல்லாம் திண்கிறீர்களே. மானங்கெட்டவங்களா எதைத்தான் விட்டுவைப்பீர்கள். உங்களுக்குப் புத்தி இல்லையா?? என்று கண்டித்தும், இறைச்சி புகைப்படத்தையும் போட்டும் வெளியிட்டு உள்ளார்.

https://twitter.com/shraddhadas43/status/1244294632411820032

தென்னிந்திய சினிமா உலகிலும், பாலிவுட்டிலும் மிக பிரபலமான நடிகை ஸ்ரத்தா தாஸ். இவர் 2008 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான 'Siddu from Sikakulam' என்ற படத்தின் மூலம் தான்சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், பெங்காலி என பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.

behindtalkies AMP · Quick view
View full