தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னட மொழிகளில் படங்களை இயக்கி தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் ராம் கோபால் வர்மா. இந்திய திரையுலகிலும், அரசியலிலும் பிரபலமானவர்களைப் பற்றி தனக்கேயுரிய பாணியில் அதிரடியான கருத்துகளையும், விமர்சனங்களையும் முன்வைத்து சர்ச்சைகளில் சிக்குபவர். மேலும், அடிக்கடி சர்ச்சையான கருத்துக்களை கூறி அடிக்கடி தனது சொந்த ரசிகர்களிடையேய வாங்கி கட்டிக்கொள்ளும் வழக்கமும் உடையவர். அந்த வகையில் சமீபத்தில் கொரோனா குறித்து இவர் பதிவிட்டது ரசிகர்களை கடும் கடுப்பில் ஆழ்த்தியுள்ளது.
தெலுங்கில் பிரபல இயக்குனரான இவர் 1989ஆம் ஆண்டு நாகர்ஜுனா நடிப்பில் வெளியான சிவா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் அதன் பின்னர் இந்தி தெலுங்கு தமிழ் என்று பல்வேறு திரைப்படங்களை இயக்கியிருக்கிறார் மேலும் இவர் பல்வேறு விருதுகளை வாங்கியிருக்கிறார் தமிழில் திருடா திருடா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். மேலும் இவர் இயக்கிய ரத்த சரித்திரம் தமிழிலும் வெளியாகி இருந்தது இந்த படத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்திருந்தார்.
இதையும் பாருங்க : கொரோனாவுக்கும் எனக்கு என்ன சம்மந்தம் ? அருண் விஜய் பட நடிகையின் பேட்டி.
எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இயக்குனர் ராம் கோபால் வர்மா அடிக்கடி எதாவது சர்ச்சையான பதிவுகளை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் கடந்த ஏப்ரில் 1 ஆம் தேதி தனக்கு கொரோனா வந்துவிட்டதாக எனக்கு மருத்துவர் கூறிவிட்டார் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் ராம் கோபால் வர்மா. இதனை கண்ட ட்விட்டர் வாசிகள் பலரும் கொஞ்சம் அதிர்ச்சியடைந்தனர்.
ஆனால், கொஞ்ச நேரம் கழித்து, எல்லோரையும் ஏமாற்றியதற்கு மன்னியுங்கள் என்னுடைய மருத்துவர் தற்போது தான் எனக்கு சொன்னார், அவர் என்னை ஏப்ரில் Fool செய்து விட்டாராம் என்று கூறி இருந்தார். இதனை கண்ட ரசிகர்கள் பலரும் ராம் கோபால் வர்மாவை கழுவி ஊற்றி வந்தனர். இதனால் ரசிகர்களிடம் மீண்டும் மன்னிப்பு கேட்டார் ராம் கோபால் வர்மா.
இதையும் பாருங்க : ஊர்ல இருந்து வந்தா என்னை தான் முதலில் பார்ப்பான், ஆனால் , பேரன் முகத்தைகூட பார்க்க முடியவில்லை – சாருஹாசன் கவலை
இப்படி நாட்டையே அச்சத்தால் உள்ளாக்கியுள்ள கொரோனா வைரஸ் குறித்து இப்படி ஒரு கேவலமான ஜோக்கை கூறியுள்ளீர்களே என்று ரசிகர்கள் பலரும் ராம் கோபால் வர்மா மீது கடும் கோபத்தில் ஆழ்ந்துள்ளனர். உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை இந்த நோயினால் 2069 பேருக்கும் மேற்பட்டோர் பதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 53 பேர் உயிரிழந்துள்ளார்கள்.