உங்க கிட்ட இத எதிர் பாக்கல – ஷ்ரத்தா கொடுத்த கிளாமர் போஸ். ஷாக்கான ரசிகர்கள்.

0
7447
shradha-srinath
- Advertisement -

தல அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத். இவர் பெரும்பன்மையாக கன்னடம் மற்றும் தமிழ் மொழி திரைப்படங்களில் தான் நடித்து வருகிறார். மேலும், 2016ஆம் ஆண்டு திரையரங்கில் வெளியான கன்னட உளவியல் பரபரப்பூட்டும் திரைப்படமான” யு டர்ன்” படத்தில் தான் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றார். பின் 2017ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்து பிளாக் பஸ்டர் படமான ” விக்ரம் வேதா” திரைப்படம் தான் இவரை சினிமா துறையில் தூக்கிவிட்டது என்று சொல்லலாம்.

-விளம்பரம்-

அது மட்டும் இல்லைங்க பல ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தார். இவர் கன்னடம், தமிழ், மலையாளம் என பல மொழிகளில் நடித்து வருகிறார். நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் தன்னுடைய சட்டப்படிப்பை பெங்களூரில் பயின்றார். பின்பு வழக்கறினராகவும்,பிரான்ஸ் நிறுவனத்தின் சட்ட ஆலோகசராகவும் பணி புரிந்தார். இப்படி இருக்கும் நேரத்தில் கூட அப்பப்ப நாடகத்திரைப்படம்,விளம்பரம் போன்ற பல வேலைகள் செய்து வந்தார்.

இதையும் பாருங்க : விஜய் கையில் வைத்திருக்கும் இந்த பிரபல நடிகை யார் தெரியுமா ? நீங்களே பாருங்க.

- Advertisement -

மேலும்,இவர் முதன் முதலில் மலையாள மொழியில் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதற்கு பிறகு இவர் தமிழில் கார்த்திகின் ‘ காற்று வெளியிடை’ படத்தில் கவுரவ தோற்றத்தில் அறிமுகமானார். பின் ஆர். கண்ணன் இயக்கத்தில் ‘இவன் தந்திரன்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்.மேலும்,புஷ்கர்- காயத்ரி இயக்கத்தில் ‘விக்ரம் வேதா’ படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்தார். இந்தப்படம் மாபெரும் வெற்றியாக அமைந்த படம். இந்த படம் வியாபார ரீதியாகவும்,விமர்சன ரீதியாகவும் வெற்றி கொடுத்தது.

அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ படத்திலும் நடித்திருந்தார்.நடிகை ஷ்ரத்தா இதுவரை திரைப்படங்களில் கூட கவர்ச்சியான வேடங்களில் நடித்தது இல்லை. இப்படி ஒரு நிலையில் இவர் சமீபத்தில் கொஞ்சம் கிளாமரான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதை கண்ட ரசிகர்கள், உங்களிடம் இருந்து இதை நான் எதிர்பார்க்கவில்லை என்று கமன்ட் அடித்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement