சினிமாவில் நடிக்க வரும் ஒரு வருசத்துக்கு முன்பு வரை எவ்ளோ குண்டாக இருந்துள்ள அஜித் பட நடிகை.

By Rajkumar · 16/8/2021

தல அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத். இவர் பெரும்பன்மையாக கன்னடம் மற்றும் தமிழ் மொழி திரைப்படங்களில் தான் நடித்து வருகிறார். மேலும், 2016ஆம் ஆண்டு திரையரங்கில் வெளியான கன்னட உளவியல் பரபரப்பூட்டும் திரைப்படமான" யு டர்ன்" படத்தில் தான் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றார். பின் 2017ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்து பிளாக் பஸ்டர் படமான " விக்ரம் வேதா" திரைப்படம் தான் இவரை சினிமா துறையில் தூக்கிவிட்டது என்று சொல்லலாம்.2015 ஆம் ஆண்டு ஒரு மலையாள படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஐந்து வருடங்களுக்கு முன்னால் குண்டான தோற்றத்தில் இருந்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு இருந்தார். இதை பார்த்த ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. "எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்" என்று சொல்வது போல் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் அவர்கள் ஆள் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார் என்று பல கருத்துக்களையும் பதிவிட்டு வந்தார்கள்.

இதையும் பாருங்க : இனி சின்ன தளபதிலாம் இல்ல - உதயநிதிக்கு கொடுப்பட்டுள்ள புதிய சினிமா பட்டம். செம மாஸ்.

இதனை தொடர்ந்து நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் கூறியது, நான் ஐந்து வருடத்தில் 18 கிலோ எடையை குறைத்து இருக்கிறேன். அதற்காக நான் பல முயற்சிகளை செய்துள்ளேன் என்று கூறினார்.அது நான் ஒரு வருஷமாக என்னுடைய சட்டப் படிப்புக்காக தான் கவனம் செலுத்தி இருந்தேன். பின்னர் என்னுடைய வேலை என்னுடைய வாழ்க்கை மாறியது. நான் முதல்ல 5 நிமிஷத்துக்கு தான் ரன்னிங் போக தொடங்கினேன். பின்னர் 15 நிமிஷம் ஓடத் தொடங்கினேன்.

அதுக்கப்புறம் 40 நிமிஷம் ஓடினேன். பின் ஐந்து வருடங்களில் சுமார் 18 கிலோ எடை குறைந்து இருக்கிறேன். அந்த போட்டோவை பார்க்கும்போது எனக்கே ஆச்சரியமா! இருக்கு என கூறியிருந்தார். நல்ல உடற்பயிற்சி, பயிற்சிகளை செய்து வந்தால் எந்த ஒரு மருந்துகளும் இல்லாமல் உடல் எடையை குறைக்கலாம் அதோட உணவுப் பழக்கங்கள் என கவனம் செலுத்தினால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று கூறினார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full