ஒரே சமயத்தில் சினிமா மற்றும் அரசியல் இரண்டிலும் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒருகலாக இருந்து வருகிறார. குருவி படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான உதயநிதி ஸ்டாலின் ஆதவன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். நான்கு படங்களை தயாரித்த பின்னர் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் ஹீரோவாக களம் இறங்கினார் உதயநிதி ஸ்டாலின். தனது முதல் படமே அமோக வெற்றி பெற்றதால் அடுத்தடுத்து படங்களில் ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார் உதயநிதி.
ஆனால் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்திற்கு பின்னர் ஒரு ஹிட் படத்தைக் கொடுக்க மிகவும் தடுமாறினார் உதயநிதி ஸ்டாலின். இடையில் இவரது நடிப்பில் வெளியான மனிதன் திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதேபோல கண்ணேகலைமானே சைக்கோ போன்ற படங்கள் உதயநிதி ஸ்டாலினுக்கு நல்ல வெற்றியை கொடுத்திருந்தது. தற்போது கண்ணை நம்பாதே என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இதையும் பாருங்க : குண்டாக நிறைய சாப்பிடனும்னு காலை 5 மணி முதல் சாப்பிட்டேன் – உடல் எடை கூட்டி பிகினி போஸில் கலக்கியுள்ள கீர்த்தி பாண்டியன்.
மேலும், கனா படத்தை இயக்கிய அருண் ராஜா காமராஜுடன் ஒரு புதிய படத்தில் கமிட் ஆகியுள்ளார் உதயநிதி சமீபத்தில் தான் இந்த படத்தின் அறிவிப்பு கூட வெளியானது. இத்தனை ஆண்டுகள் சினிமாவில் இருந்தாலும் உதயநிதிக்கு இதுவரை சினிமாவில் பட்டப் பெயர் இல்லாமல் தான் இருந்தது. பொதுவாக தமிழ் சினிமாவில் இருக்கும் பெரும்பாலானோருக்கு பட்டப் பெயர் இருக்கும்.
அந்த வகையில் உதயநிதிகும் புதிய பட்டப்பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. சீனு ராமசாமி இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் நடிக்கும் படத்தின் போஸ்டரை உதயநிதி வெளியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. அந்த போஸ்டரில் ‘மக்கள் அன்பன்’ உதயநிதி என்று குறிப்பிடபட்டுள்ளது. மக்கள் திலகம் எம்ஜிஆர், மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை தொடர்ந்து தற்போது உதயநிதியும் மக்கள் பட்டத்தை பெற்று உள்ளார்.