தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் உலகநாயகன் கமலுக்கு ஸ்ருதிஹாசன் அக்ஷரா ஹாசன் என்ற இரு மகள்கள் இருப்பது அனைவரும் அறிந்த விஷயமே கமலின் இளைய மகள் ஸ்ருதி ஹாசன், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தார். ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘7 ஆம் அறிவு’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால், சிறு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் ஸ்ருதி ஹாசன்.

இறுதியாக சூர்யா நடிப்பில் வெளியாகி இருந்த சிங்கம் 3 படத்தில் நடித்திருந்தார் அதன் பின்னர் அம்மணியை வேறு எந்த தமிழ் படத்திலும் காணமுடியவில்லை மேலும் இவரது தந்தை கமல்ஹாசன் இயக்கி நடித்து வந்த பல்ராம் நாயுடு படத்தில் இவர் நடிப்பதாக இருந்தது ஆனால் அந்த படமும் கைவிடப்பட்டதால் தற்போது அம்மணியை எந்த படத்திலும் காணமுடியவில்லை.

இதையும் பாருங்க : Gvm-ன் ‘கிட்டார் கம்பி மேலே நின்று’ சீரிஸ்ஸை பங்கமாக கலாய்த்த தமிழ் பட இயக்குனர். விழுந்து விழுந்து சிரித்த சின்மயி.

Advertisement

இருப்பினும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் சுருதிஹாசன் அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் நடிகையாகும் முன்னர் 17 வயதில் மாடலிங் துறையில் இருந்த போது ஒரு மாடலாக நடத்திய முதல் போட்டோ ஷூட் புகைப்படங்களை தன் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகை சுருதி ஹாசன் தனது மூக்கை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து இருக்கிறார் என்பது பலர் அறிந்த ஒன்று தான். இதனால் இவரை பலர் கேலி செய்து இருந்தனர். இதுகுறித்து கடந்த சில மாதங்களுக்கு முன் பேசிய சுருதி ஹாசன், நான் ஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டிருக்கிறேன்.அதற்காக நான் அசிங்கப்பட இல்லை. அதனை நான் எப்போதாவது விளம்பரப்படுத்தி இருக்கிறேனா ? இல்லை அதற்கு எதிராக நான் இருக்கிறேனா ? கிடையவே கிடையாது என்று கூறி இருந்தார்.

Advertisement
Advertisement