நடிகர் விஜய் தான் ஆம்பள, அவரை பார்த்தல் தான் அந்த எண்ணம் வருகிறது.! விஜயுடன் நடித்த சர்ச்சை நடிகை.!

0
1712
- Advertisement -

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தளபதி விஜய். தனக்கென மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்தையே கொண்டிருப்பவர். சாதாரண ரசிகர்களை தாண்டி திரையுலககில் இருக்கும் பல்வேறு நடிகர் நடிகைகளுக்கும் விஜய் தான் அபிமானமான ஹீரோவாக இருந்து வருகிறார்.

-விளம்பரம்-

விஜய் குறித்து பல்வேறு நடிகர், நடிகைகள் பல தகவல்களை கூறி நாம் கேட்டுள்ளோம். அந்த வகையில் பிரபல நடிகையான சோனா, திரையுலகில் நடிகர் விஜய் தான் ஆம்பள என்று வெளிப்படையாக பேசியிருப்பது விஜய் ரசிகர்கள் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

- Advertisement -

தமிழ் சினிமாவின் முன்னணி கவர்ச்சி நடிகைகளில் ஒருவர் சோனா. கோச்சடையான், பத்துக்கு பத்து உள்ளிட்ட பல படங்களில் படு கவர்ச்சியாக நடித்திருப்பார். சில படங்களில் நடிகர் வடிவேலுக்கு ஜோடியாக நடித்து காமெடி செய்திருப்பார். மேலும், விஜய்யின் ஷாஜகான் படத்திலும் நடித்திருந்தார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சோனா, நடிகர் விஜய் குறித்து பேசுகையில், ஆம்பளனா விஜய் மாதிரி இருக்கணும்.பெண்களை பார்த்ததும் வழிய கூடாது. அவர்களை பார்த்தாலே நமக்கு மரியாதை கலந்த பயம் வர வேண்டும். நடிகர் விஜயை பார்த்தால் எனக்கு அப்படி தான் மரியாதை கலந்த பயம் வரும் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement