இந்தி நடிகையான இவர் இந்தியில் பல படங்களில் நடித்துள்ளார். மேலும், தமிழில் குணால் நடித்த 'காதலர் தினம்' நடிகர் அர்ஜுன் நடித்த 'கண்ணோடு காண்பதெல்லாம் ' போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். சில நாட்களுக்கு முன்னர் தனக்கு புற்றுநோய் இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் சோனாலி தெரிவித்திருந்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
தற்போது நியூயார்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகை சோனாளி கொஞ்சம் கொஞ்சமாக உடல் நலம் தேறி வருகிறார். தனக்கு புற்று நோய் இருப்பதை அறிந்த நண்பர்களும் உறவினர்களும் அடிக்கடி தமக்கு போன் செய்து நலம் விசாரித்து தனக்கு ஆறுதலாக இருந்து வருவதாக கூறியிருந்தார். மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகை சோனாலி சமீபத்தில் தனது இன்ஸ்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
மேலும், இத்தனை நாட்கள் கேட்சர் நோயால் பாதிக்கபட்டு மொட்டை போட்டுக்கொண்டு அடையாளம் தெரியாத அளவிற்கு இருந்த நடிகை சோனாலி தற்போது விக் ஒன்றை தயார் செய்து அதனை அணைந்த புகைப்படம் எடுத்துக்கொண்டு அதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.




