அஜித் பற்றி பேசிய ஸ்ரீ ரெட்டி.! இந்த முறை என்ன சொன்னார் தெரியுமா.?

0
1948
Ajith

தெலுங்கு சினி உலகை சில மாதங்களாக ஆட்டிப்படைத்து வருபவர் தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி .சில மாதங்களாக ட்விட்டரில் ஸ்ரீ ரெட்டி லீக்ஸ் என்ற பெயரில் தன்னுடன் நெருக்கமாக இருந்த பிரபலங்கள், தன்னை படுக்கைக்கு அழைத்த தெலுகு பிரபலங்கள் என பலரின் பெயர்களை வெளியிட்டு வந்த நடிகை ஸ்ரீரெட்டி நடிகர் அஜித் குறித்தும் பேசியுள்ளார்.

நடிகை ஸ்ரீரெட்டி தற்போது தமிழ் திரையுலகை குறிவைத்துள்ளது போல தமிழ் சினிமா பிரபலங்கள் குறித்து சர்ச்சையான ட்வீட்களை பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் மற்றும் நடிகர் ஸ்ரீகாந்த் பற்றி சர்ச்சையான டீவீட்டை பதிவிட்ட நடிகை ஸ்ரீரெட்டி, சமீபத்தில் நடிகர் ராகவா லாவரன்ஸ் பெயரை குறிப்பிட்டு மற்றுமொரு சர்ச்சையான டீவீட்டை பதிவிடட்டிருந்தார்.அதே சமயம் இவர் கூறி வரும் குற்றச்சாட்டுகள் மிகவும் ஆதகிரமாற்றது என்றும்
சிலர் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் நடிகை ஸ்ரீரெட்டி பேட்டி ஒன்றில் பங்கேற்ற போது உங்களுக்கு மிகவும் பிடித்த நடிகர் யார் என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்தது. இதற்கு நடிகை ஸ்ரீரெட்டி சற்றும் யோசிக்காமல்’எனக்கு மிகவும் பிடித்த நடிகர் அஜித் தான், அவர் ஒரு சிறந்த மனிதர்’ என்று தெறிவித்துள்ளார். தற்போது இந்த தகவல் வலைதளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.

ajithkumar

தமிழ் சினிமாவில் மாபெரும் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருபவர் நடிகர் அஜித். அவரை பற்றி பல பிரபாலங்களும் ஏற்கனவே பெருமை பேசி வந்த நிலையில் தற்போது நடிகர்கள் மீது பல குற்றசாட்டுகளை வைத்து வரும் ஒரு நடிகை ஸ்ரீரெட்டி, அஜித்தின் நல்ல குணத்தை பற்றி பாராட்டியுள்ளார். அஜித் ஒரு ஜெண்டில் மேன் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது.