ஸ்ரீப்ரியா வீட்டில் நேர்ந்த இறப்பு – குழந்தையுடன் வந்து அஞ்சலி செலுத்திய சுஜா & சிவா.

0
1140
sripriya
- Advertisement -

நடிகை ஸ்ரீபிரியாவின் தாயார் காலமாகி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக இருந்தவர் ஸ்ரீபிரியா. இவர் 1970 மற்றும் 1980 காலகட்டங்களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். அதிலும், பேரழகி ஸ்ரீதேவிக்கு இணையாக போட்டி போட்டு நடித்து வளர்ந்தவர் ஸ்ரீபிரியா என்று சொல்லலாம். இவர் இதுவரைக்கும் 300 திரைப் படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களில் நடித்திருக்கிறார். அதுவும் இவர் ரஜினியுடன் 30 படங்கள் மற்றும் கமலுடன் 28 படங்கள் என பிரம்மாண்டமாக நடித்து அசத்தியவர். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார். பின் சிறிது காலம் இவர் சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.

- Advertisement -

ஸ்ரீபிரியா குடும்பம்:

மீண்டும் இவர் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் இவர் திரைப்படங்களையும், தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கி இருக்கிறார். இதனிடையே நடிகை ஸ்ரீபிரியா அவர்கள் மலையாள நடிகர் ராஜ்குமார் சேதுபதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நாகார்ஜுன் மற்றும் ஸ்நேகா என இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். மேலும், ஸ்ரீப்ரியா தன் பிள்ளைகளை பல ஆண்டுகளாக மீடியா வெளிச்சம் படாமல் இருந்தார்.

ஸ்ரீபிரியாவின் தாயார்:

சில ஆண்டுகளுக்கு முன் தான் ஸ்ரீபிரியா மகளுக்கு திருமணம் நடந்தது. தற்போது ஸ்ரீப்ரியா அவர்கள் திரைப்படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ஸ்ரீபிரியாவின் தாயார் காலமாகி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, நடிகை ஸ்ரீபிரியாவின் தாயார் குடந்தை கிரிஜா பக்கிரிசாமி. ஸ்ரீபிரியாவின் தாயாரும் சினிமா உலகில் பிரபலமானவர் தான்.

-விளம்பரம்-

ஸ்ரீபிரியாவின் தாயார் மறைவு:

இவர் காதோடு தான் பேசுவேன் என்ற படத்தை இயக்கியிருக்கிறார். நீயா உள்ளிட்ட படங்களை தயாரித்தும் இருக்கிறார். இன்று ஸ்ரீபிரியாவின் தாயார் கிரிஜா பக்ரிசாமி அவர்கள் வயது மூப்பு காரணமாக காலம் ஆகி இருக்கிறார். இன்று மாலை மயிலாப்பூரில் கிரிஜா அவர்களின் இறுதி சடங்கு நடைபெற இருக்கிறது. இவருடைய மறைவிற்கு திரை உலக பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement