எந்த வயசுல அந்த இடத்துல வளையம் குத்துனீங்க - ரசிகரின் கேள்விக்கு நச் பதில் அளித்த ஸ்ருதி.

By Rajkumar · 26/2/2021

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் உலகநாயகன் கமலுக்கு ஸ்ருதிஹாசன் அக்ஷரா ஹாசன் என்ற இரு மகள்கள் இருப்பது அனைவரும் அறிந்த விஷயமே கமலின் இளைய மகள் ஸ்ருதி ஹாசன், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தார். ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான '7 ஆம் அறிவு' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால், சிறு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் ஸ்ருதி ஹாசன்.

இறுதியாக சூர்யா நடிப்பில் வெளியாகி இருந்த சிங்கம் 3 படத்தில் நடித்திருந்தார் அதன் பின்னர் அம்மணியை வேறு எந்த தமிழ் படத்திலும் காணமுடியவில்லை மேலும் இவரது தந்தை கமல்ஹாசன் இயக்கி நடித்து வந்த பல்ராம் நாயுடு படத்தில் இவர் நடிப்பதாக இருந்தது ஆனால் அந்த படமும் கைவிடப்பட்டதால் தற்போது அம்மணியை எந்த படத்திலும் காணமுடியவில்லை இருப்பினும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் சுருதிஹாசன் அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

இதையும் பாருங்க : 70 லட்சம் பணத்தை வாங்கிக்கொண்டு திருமணம் செய்ய மறுப்பதாக ஆர்யா மீது பெண் புகார் ? வைரலாகும் புகாரின் புகைப்படம்.

அதற்கு வரும் விமர்சனங்களுக்கு எல்லாம் சற்றும் சளைக்காமல் பல முறை பதிலடி கொடுத்ததும் இருக்கிறார். அவ்வளவு ஏன் சமீபத்தில் இவர் புகைப்படம் ஒன்றை பதிவிட பலரும் நீங்கள் மிகவும் ஒல்லியாக விட்டீர்கள் என்றும் இப்படி உங்களை பார்க்கவில்லை என்றும் பல்வேறு விதமான விமர்சனங்களை தெரிவித்திருந்தார்கள் இதனால் கொஞ்சம் கடுப்பு அடைந்த சுருதிஹாசன், நான் ஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டிருக்கிறேன். அதற்காக நான் அசிங்கப்பட இல்லை. அதனை நான் எப்போதாவது விளம்பரப்படுத்தி இருக்கிறேனா ? இல்லை அதற்கு எதிராக நான் இருக்கிறேனா ? கிடையவே கிடையாது.

நான் எப்படி வாழ வேண்டும் என்பதைத்தான் குறிக்கிறது. நாம் செய்யும் மிகப்பெரிய செயல் ஒருவரை எப்படி இருக்கிறார்களோ அப்படியே ஏற்றுக் கொள்வதுதான் என்று கூறி இருந்தார் இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஸ்ருதி ஹாசன் பதிலளித்து கொண்டு இருக்கும் போது, ரசிகர் ஒருவர், எந்த வயதில் தொப்புளில் வளையம் குத்தினீங்க என்று கேட்டதர்க்கு, 19 வயதில் என்று பதில் கொடுத்துள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full