70 லட்சம் பணத்தை வாங்கிக்கொண்டு திருமணம் செய்ய மறுப்பதாக ஆர்யா மீது பெண் புகார் ? வைரலாகும் புகாரின் புகைப்படம்.

0
14169
Arya
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் ஆர்யா. இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளரும் ஆவார். இவர் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த அறிந்தும் அறியாமலும் என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து நான் கடவுள், மதராசபட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், வேட்டை, ராஜா ராணி, இரண்டாம் உலகம், ஆரம்பம் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து உள்ளார். பின் 2018 ஆம் ஆண்டு கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான மிகப் பிரபலமான நிகழ்ச்சி எங்க வீட்டு மாப்பிளை.

-விளம்பரம்-
arya

நடிகர் ஆர்யா அவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற 16 பெண்களில் இருந்து தன்னுடைய வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்து திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்று கூறப்பட்டது. ஆனால், இறுதி வரை அவர் அந்த பெண்களில் இருந்து யாரையுமே திருமணம் செய்து கொள்ளவில்லை. எதற்காக இந்த நிகழ்ச்சி, ஒரு வேளை டிஆர்பி ரேட்டிங்காகவா? உண்மையாகவே ஆர்யாவின் திருமணத்திற்கு பெண் தேடுவதற்காக நடந்ததா? என்று இன்னும் வரை இந்த நிகழ்ச்சி புரியாத புதிராகவே உள்ளது.மேலும், இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தான் நடிகர் ஆர்யா அவர்கள் நடிகை சாய்ஷா அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

- Advertisement -

இந்த நிலையில் ஆர்யா தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கூறி பல லட்சம் பணம் வாங்கி ஏமாற்றிவிட்டதாக இலங்கைப் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளதாக பரவி வரும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையை சேர்ந்த தமிழ் பெண்ணான விட்ஜா என்பவர், நடிகர் ஆர்யா தன்னை திருமணம் செய்வதாக கூறி 70 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெற்றதாகவும் பின்னர் திருமணம் செய்து கொள்ளாமல் மறுத்ததோடு தன்னிடம் பெற்ற பணத்தையும் திருப்பி கொடுக்காமல் இருக்கிறார் என்றும் அந்த பெண் புகார் அளித்துள்ளதாக சமூக வலைத்தளத்தில் ஒரு செய்தி வைரலாக பரவி வருகிறது.

மேலும் அந்த பெண் அளித்த புகாரின் ஸ்க்ரீன்ஷாட் ஒன்றும் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. விட்ஜா, இந்திய பிரதமர் மற்றும் குடியரசுத்தலைவர் அலுவலகங்களுக்கு ஆன்லைன் மூலமாக புகார் அளித்திருக்கிறார் மேலும் தனக்கும் நடிகர் ஆர்யாவின் அம்மாவுக்கும் நடந்த வாக்குவாதங்கள் பணப் பரிவர்த்தனைகள் போன்றவர்களுக்கு ஆதாரங்களையும் தன்னுடைய புகாரில் அவர் நினைத்து உள்ளதாகவும் தெரிகிறது இந்த சம்பவத்தால் கொஞ்சம் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது

-விளம்பரம்-
Advertisement