தன்னுடைய விவாகரத்து குறித்து மனம் திறந்து நடிகை சுலோக்சனா அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் சுலோக்ஷனா. இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாவுலகில் அறிமுகமாகியிருந்தார். பின் இவர் 1982 ஆம் ஆண்டு பாக்யராஜ் நடிப்பில் வெளியான தூறல் நின்னு போச்சு என்ற படத்தின் மூலம் தான் நாயகியாக அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து இவர் ரஜினிகாந்த், கமலஹாசன், சத்யராஜ் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார். பின் வாய்ப்புகள் குறைந்த உடன் இவர் படங்களில் குணசித்திர வேடத்தில் நடித்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் இவர் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து இருக்கிறார். மேலும், இவர் இசையமைப்பாளர் எம் எஸ் விஸ்வநாதனின் மருமகள் என்பது பலருமே அறிந்திடாத விஷயம்.

Advertisement

நடிகை சுலோக்சனா குடும்பம்:

இதை நடிகை சுலோக்சனா எந்த இடத்திலும் பயன்படுத்தியது கிடையாது. இவர் 16 வயதிலேயே பிஸியான நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வந்த போது எம் எஸ்வியின் மூத்த மகனுக்கும் இவருக்கும் காதல் ஏற்பட்டது. அவர் ஒரு திரைப்பட இயக்குனர் ஆரம்பத்தில் இவர்கள் இருவருக்கும் மோதல் ஏற்பட்டாலும் அதே பின்னடைவில் காதலாக மாறியது. 18 வயதில் சுலக்ஷனா திருமணம் செய்து 22 வயதில் விவாகரத்தும் செய்து விட்டார்.

நடிகை சுலோக்சனா பேட்டி:

இந்த நிலையில் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் நடிகை சுலோக்சனா தன்னுடைய வாழ்க்கையில் அனுபவித்த கஷ்டங்கள் குறித்து கூறி இருப்பது, எனக்கு 18 வயதிலேயே திருமணம் ஆகிவிட்டது. பின் 22 வயதில் விவாகரத்தும் செய்து விட்டேன். எனக்கு ரெண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். என்னுடைய பெற்றோர்களை விட எம் எஸ் வி குடும்பத்தில் ரொம்பவே என்னை பாசமாக பார்த்துக் கொண்டார்கள். எங்களுடைய காதல் விவகாரம் தெரிந்து இரு வீட்டிலேயும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

Advertisement

விவாகரத்து குறித்து சொன்னது:

திருமணத்திற்கு பிறகும் என்னுடைய கணவர் படத்தில் நடிக்க எனக்கு அனுமதித்து தந்தார். ஆனால், எங்கள் விவாகரத்துக்கு காரணங்கள். அதை வெளியில் சொல்ல முடியாது. எங்களுடைய தனிப்பட்ட விருப்பதால் தான் நாங்கள் பிரிந்தோம். அதை நான் இந்த இடத்தில் சொல்லி கொச்சைப்படுத்த விரும்பவில்லை. அதோட என்னுடைய குழந்தைகளை நான் தனியாகவே தான் வளர்த்தேன். இப்போது அவர்களை நன்றாக படிக்க வைத்து திருமணமும் செய்து வைத்து விட்டேன். என் கணவர் விவாகரத்து செய்த பிறகு வேறு ஒரு திருமணம் செய்து கொண்டார். ஆனால், எனக்கு இன்னொரு திருமணத்தில் நம்பிக்கை இல்லை.

Advertisement

கணவர் குறித்து சொன்னது:

இப்போது நாங்கள் நல்ல நண்பர்களாக தான் இருக்கிறோம். பிரிந்து விடலாம் என்ற பின் ஒருவரை ஒருவர் குற்றம் சொல்வது தேவையில்லாத ஒன்று. அதேபோல் பிரிந்து வந்த பிறகு அவரிடம் பணம் கேட்கவோ, வேறு ஏதாவது தொந்தரவு செய்யவும் எனக்கு பிடிக்கவில்லை. என்னுடைய குழந்தைகளை என்னுடைய செலவில் தான் நான் படிக்க வைத்தேன். அதேபோல் என்னுடைய குழந்தைகளின் திருமணத்திற்கும் அவரை கூப்பிட்டேன். அவரும் அவருடைய மனைவி குடும்பத்துடன் வந்து ஆசீர்வாதம் செய்துவிட்டு சென்றார். இப்போதும் ஏதாவது பிறந்தநாள், நிகழ்ச்சி என்றால் அவர் போன் செய்து விஷ் பண்ணுவார் என்று கூறியிருக்கிறார்.

Advertisement