விஜய்யை அப்படி கூப்பிட ஒரு மாதிரி இருக்கு..! பிரபல நடிகை ஓபன் டாக் .! புகைப்படம் உள்ளே..!

0
1245

நடிகர் நகுல் நடித்த “காதலில் விழுந்தேன்” என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகை சுனைனா. நீண்ட இடைவேளைக்கு பிறகு இளையதளபதி விஜய் நடித்த “தெறி” படத்தில் விஜய்க்கு ஒரு பெண் பார்க்கும் காட்சியில் மட்டும் நடித்திருப்பார். அந்த காட்சியில் விஜயை அண்ணா என்று அழைக்க தனக்கு சங்கடமாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.

sunaina

அந்த படத்திற்கு பிறகு தற்போது விஜய் ஆண்டனி நடித்து வரும் “காளி ” என்ற படத்தில் 4 கதாநாயகளில் ஒருவராக நடித்து வருகிறார். இந்த படத்தை நடிகர் உதயநிதியின் மனைவி கிருத்திகா உதயநிதி இயக்கிவருகிறார். மேலும் , இந்த படத்தை விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா ஆண்டனி தயாரித்து வருகிறார்.

சமீபத்தில் இந்த படத்தின் படக்குழு இந்த படத்திற்கான ப்ரோமோ நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. அதில் பங்குபெற்ற நடிகை சுனைனாவிடம் தெறி படத்தில் நீங்கள் விஜய்யுடன் நடித்த அனுபத்தை பற்றி சொல்லுங்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

vijay

அந்த கேள்விக்கு பதிலளித்த நடிகை சுனைனா “தெறி படத்தில் நடித்தது ஒரு மிக மகிழ்ச்சியான அனுபவம் தான், ஆனால், அந்த படத்தில் விஜயை நான் அண்ணன் என்று அழைக்க சற்று சங்கோஜமாக இருந்தது. ஆனால், என்னை விட வயதிலும், அனுபத்திலும் மிக பெரிய விஜயுடன் நடித்ததை சில நாட்கள் கழித்து பார்த்தால் சற்று பெருமையாக தான் இருக்கும் ” என்று தெரிவித்துள்ளார்.