தனுசுக்கு எதிராக நயன்தாராவிற்கு ஆதரவாக நடிகைகள் குரல் கொடுத்து வரும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் தனுஷ்- நயன்தாரா இடையேயான பஞ்சாயத்து தான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவராகவும், லேடி சூப்பர் ஸ்டார் ஆகவும் நயன்தாரா திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் பிளாக் பஸ்டர் கொடுத்திருக்கிறது. தற்போது இவர் பிசியாக படங்களில் நடித்து கொண்டு வருகிறார்.

இதற்கு இடையே இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் பிரம்மாண்டமாக சென்னை மாமல்லபுரத்தில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் நடைபெற்றிருந்தது. இந்த திருமணத்தில் பிரபலங்கள் பலருமே கலந்து கொண்டிருந்தார்கள். மேலும், இந்த திருமணத்தை ஆவணப்படுத்தி ஒளிபரப்பு உரிமையை netflix நிறுவனம் பெற்றிருந்தது. இதனால் இது தொடர்பான வீடியோக்கள் எதுவுமே வெளியாகவில்லை. விக்கி -நயன் திருமணத்தினுடைய ஆவணப்படுத்தப்பட்ட வீடியோவை 'Beyond the Fairy Tale’ என்ற பெயரில் உருவாக்கி இருக்கிறார்கள்.
நயன் திருமண வீடியோ:
மேலும், இந்த திருமண நிகழ்வு வீடியோ வருகிற நவம்பர் 18ஆம் தேதி வெளியாகும் என்று netflix நிறுவனமே அறிவித்திருந்தது. இந்த படத்தை இயக்குனர் அம்ரித் கிருஷ்ணன் இயக்கி இருக்கிறார். இதில் நானும் ரவுடிதான் படத்தினுடைய பாடல்கள், காட்சிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், நானும் ரவுடி தான் படத்தினுடைய தயாரிப்பாளர் தனுஷ். இவருடைய அனுமதி கேட்டு 2 வருடங்களாக காத்து இருந்தார்கள். ஆனால், தனுஷ் அனுமதி தரவில்லை. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் இந்த 'Beyond the Fairy Tale’ படத்தினுடைய ட்ரைலர் வெளியாகியிருந்தது.
Nayanthara open letter to Dhanush. pic.twitter.com/uX2iNFaqoT
— LetsCinema (@letscinema) November 16, 2024
நயன் போஸ்ட்:
அதில் மூன்று வினாடி நானும் ரவுடிதான் படத்தினுடைய பாடல் மற்றும் ஒரு காட்சி வந்திருக்கிறது. இதனால் தனுஷ் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நயன்தாராவிற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். தற்போது இந்த விவகாரம் தான் காட்டுத்தீயாய் சோசியல் மீடியாவில் பரவி கொண்டிருக்கின்றது. பின் இது தொடர்பாக நடிகை நயன்தாராவும் தனுஷ் மீது குற்றம் சாட்டி கடிதம் ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், என்னுடைய netflix ஆவணப்படத்திற்கு எதிராக நீங்கள் கொண்டிருக்கும் பழிவாங்கும் எண்ணம் தெளிவாக புரிகிறது. இது ரொம்ப தவறான செயல். மேடையில் நீங்கள் அன்பானவர் போல பேசிவிட்டு நேரடியாக நடக்கும்போது பல வித்தியாசங்களை காட்டுகிறீர்கள்.

தனுஷ்-நயன் சர்ச்சை:
மக்களை நீங்கள் ஏமாற்ற முடியாது. நீங்கள் பொய்யான கதைகளையும், பஞ்ச் வசனங்களையும் ஆடியோ வெளியீட்டில் கொடுக்கலாம். ஆனால், கடவுள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார். உங்களின் கீழ்த்தரமான இந்த செயல் ஒரு மனிதராக நீங்கள் எப்படிப்பட்டவர்? என்பதை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது என்று கூறியிருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் இந்த விவகாரம் இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் பலர் நயன்தாராவிற்கு ஆதரவாகவும் தனுஷுக்கு எதிராகவும் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

நடிகைகள் ஆதரவு:
அந்த வகையில் நடிகைகளான ஸ்ருதிஹாசன், ஐஸ்வர்யா ராஜேஷ், பார்வதி நாயர், அனுபமா, நஸ்ரியா, ஐஸ்வர்யா லட்சுமி உட்பட பலர் நயன்தாராவின் பதிவிற்கு லைக்ஸ் செய்து ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் இவர்கள் அனைவருமே தனுசுடன் சேர்ந்து நடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த தகவல் இணையத்தில் வெளியானதை தொடர்ந்து பலருமே, இது காப்பி ரைட் சர்ச்சையாக மட்டும் இருக்காது, வேறு ஏதாவது இருக்கலாம். ஒட்டுமொத்த நடிகைகளுமே தனுசுக்கு எதிராக இருப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். இதற்கு தனுஷ் தரப்பில் இருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.






