உள்ளங்காலில் ஸ்வஸ்திக் முத்திரையை குத்தி சர்சையையை ஏற்படுத்திய பிக் பாஸ் பிரபலம்..!

0
991
Sophiya
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே சர்ச்சைகளுக்கு என்றுமே பஞ்சம் இருக்காது. இந்தி மட்டும் தெலுங்கில் இரண்டாவது சீசன் எட்டியுள்ள இந்த நிகழ்ச்சி இந்தியில் 11 சீசன்களை கடந்துள்ளது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் 7வது சீசனில் கலந்து கொண்ட நடிகை சோபியா சர்ச்சையான விடயங்களை செய்வதில் வாடிக்கையாக வைத்து வருகிறார்.

-விளம்பரம்-

Sofiahayath

- Advertisement -

இந்தியில் 11 சீசன்களை கடந்துள்ள பிக் பாஸ் நிகழ்ச்சிகளை இதுவரை பாலிவுட் பிரபலங்களான ஷில்பா ஷெட்டி, அமிதாப் பச்சன், சல்மான் கான் போன்றவர்கள் தொகுத்து வழங்கியுள்ளனர். இதில் கடந்த 2013 ஆம் ஆண்டு சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பங்குபெற்று மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை சோபியா ஹயாத்.

பாலிவுட் நடிகையான இவர், ஒரு சில இந்தி படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு ரோமானிய நாட்டை சேர்ந்த விளாட் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.ஆனால் திருமணமான ஒரு வருடத்திலேயே இருவரும் பிரிந்து விட்டனர்.

-விளம்பரம்-

சில மாதங்களுக்கு முன்னர் தனது கணவர் மீதே செக்ஸ் டார்ச்சர் குற்றச்சாட்டை வைத்து பரபரப்பை ஏற்படுத்திய இவர், சமீபத்தில் தனது உள்ளங்களில் இந்துக்கள் புனித அடையாளமாக மதிக்கக்கூடிய ஸ்வஸ்திக் முத்திரையை பச்சை குத்தியுள்ளார். இதனை கண்ட பலரும் இவரது கேவலமான இந்த செயலுக்கு கழுவி ஊற்றி வருகின்றனர்.

Advertisement