சுப்ரமணியபுரம் நடிகைக்கு திருமணம்.! மாப்ள இவரா..? கொஞ்சம் யோசிச்சி இருக்கலாம்.! புகைப்படம் இதோ.!

0
355
Swathy-reddy

தமிழில் இயக்குனர் சசி குமார் இயக்கத்தில் 2008 ஆண்டு வெளியான ‘சுண்ப்ரமணியபுரம் ‘ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஸ்வாதி ரெட்டி. அந்த படத்திற்கு பின்னர் தமிழில் ‘கனிமொழி, போராளி, வடகறி ‘ போன்ற பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். தற்போது 31 வயதாகும் ஸ்வாதி விரைவில் மணமுடிக்க உள்ளார்.

swathi Actress

திரைப்பட நடிகையாக இருந்து வந்த ஸ்வாதி ரெட்டி , நடிகை இலியானாவிற்கு ஒரு சில படங்களில் டப்பிங்கும் கொடுத்துள்ளார். மேலும், ஒரு சில படங்களில் பின்னணி பாடலையும் பாடியுள்ளார். தொடர்ந்து தமிழ், தெலுகு, மலையாளம் என்று நடித்து வந்தாலும் நடிகை ஸ்வாதி ரெட்டிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்தபாடில்லை.

இந்நிலையில் படங்களை நடிப்பதை நிறுத்திவிட்டு திருமணம் செய்துகொள்ளலாம் என்று ஸ்வாதி முடிவெடுத்துள்ளாராம். இந்தோனேசியாவை சேர்ந்த விகாஸ் என்ற நபரை தான் ஸ்வாதி திருமணம் செய்துகொள்ள போகிறார். விகாஸ், மலேசிய ஏர்லைன்ஸ்ஸில் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்வாதி மற்றும் விகாஸின் திருமணம் வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி நடைபெற உள்ளது.

Actress-swathi

இதற்கு முன்னாள் நடிகை ஸ்வாதி, தெலுங்கு நடிகர் நிகில் சித்தார்த்தை காதலித்து வந்ததாக கிசுகிசுக்கபட்டது . ஆனால் , அந்த தகவலை ஸ்வாதி மறுத்திருந்தார். அதே போல கடந்த ஆண்டு பேட்டி ஒன்றில் பங்கேற்ற போது நடிகை ஸ்வாதி, தான் விரைவில் திருமணம் செய்துகொண்டு சந்தோசமாக வாழபோவதாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.