நடிகை டாப்ஸிக்கு காலில் ஏற்பட்ட முறிவு…!பின்னர் அவரே சொன்ன விளக்கம்..!

0
93
taapsee

தமிழ் சினிமாவில் தனுஷ் நடித்த ஆடுகளம் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை டாப்சி அறிமுக படத்தில் சிறப்பான வரவேற்பினை பெற்ற இவர் அடுத்து நடித்த படங்கள் வரிசையாக தோல்வி அடைய இவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்பு மங்க தொடங்கியது.

Taapseefracture

அதன்பிறகு டாப்சி கோலிவுட் பக்கம் இருந்து விலகி பாலிவுட் பக்கம் தன் கவனத்தை செலுத்தினார். தற்போது ஹிந்தி படஉலகில் முன்னணி கதாநாயகியாக உள்ளார் இவருடைய அடுத்தடுத்த பாலிவுட்டில் ஹிட் அடிக்க அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். அவ்வப்போது தமிழ் மற்றும் தெலுங்கில் தலை காட்டி வருகிறார்.

இந்நிலையில் நடிகை டாப்ஸி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் இரண்டு காலில் காட்டுடன் இருப்பது போல இருந்தது. இதனை கண்ட அனைவரும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு விட்டதா என்று நடிகை டாப்ஸியை வினாவை வந்தனர்.

taapsee

ஆனால், உண்மையில் நடிகை டாப்ஸி தற்போது ‘கேம் ஓவர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் கெட்டப்பில் இருக்கும் புகைப்படத்தை தான் பதிவிட்டதாக நடிகை டாப்ஸி மற்றுமொரு இன்ஸ்டாக்ராம் பதிவில் பதிவிட்டுள்ளார்.