தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை தமன்னா. 2006 ஆம் ஆண்டு ரவி கிருஷ்ணா நடித்த கேடி படம் மூலம் தமிழில் ரசிகர்கள் மத்தியில் பரிட்சயமானவர் நடிகை தமன்னா. ஆனால், அதற்கு முன்பாகவே இவர் 2005 ஆம் ஆண்டு இந்தியில் அறிமுகமாகியிருந்தார். தற்போது தமிழில் முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார். தமிழில் இவர் விஜய், அஜித், சூர்யா, விக்ரம்,தனுஷ் என அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து உள்ளார். தமிழ் மொழியை போல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக பட்டைய கிளப்பி கொண்டு இருக்கிறார் தமன்னா. தற்போது நடிகை தமன்னாவிடம் தட்ஸ் மகாலட்சுமி என்ற படம் மட்டும் தான் கைவசம் உள்ளது.

இந்த நிலையில் நடிகை தமன்னாவை நடிகர் ரவிதேஜாவின் அடுத்த படத்தில் நடிக்கக் கேட்டு தயாரிப்பு தரப்பில் பேச்சுவார்த்தை நடந்தது. அதற்கு நடிகை தமன்னா அவர்கள் அதிக சம்பளம் கேட்டதாக சமீபத்தில் சோசியல் மீடியாவில் தகவல் வெளியானது. இந்நிலையில் இது குறித்து நடிகை தமன்னாவிடம் கேட்டபோது அவர் கூறியது, கடந்த பிப்ரவரி மாதமே படத்தில் நடிப்பது குறித்து தயாரிப்பு மூலம் என்னை அணுகினார்கள்.

Advertisement

ஆனால், துரதிர்ஷ்டவசமாக கரோனா காரணமாக தயாரிப்பு நிறுவனமே பேச்சுவார்த்தையை நிறுத்தியது.
நான் எப்போதும் சினிமா சம்பந்தப்பட்ட விஷயங்களில் தொழில்முறை கண்ணியத்தை கடைபிடித்து வருகிறேன். இது மாதிரி சோசியல் மீடியாவில் கிளப்பும் வதந்திகளுக்கு நான் பொறுப்பு அல்ல. இது எல்லாம் உண்மையில்லை. நானும்,ரவிதேஜாவும் நல்ல நண்பர்கள். அப்படி இருக்கும் போது நான் ஏன் அவர் படத்தை நிராகரிக்க வேண்டும்.

மேலும், சம்பளம் என்பது அந்தந்த நடிகரின் தனிப்பட்ட முடிவு. அவரது மதிப்பை தீர்மானிப்பதும், கொடுக்கும் சம்பளத்துக்கு சமரசம் செய்து கொள்வதும், செய்யாமல் போவதும் அவரவர் விருப்பம். எப்போதுமே ஒரு நடிகை அவரது சம்பளத்தில் சமரசம் செய்துகொள்ள வேண்டும் என்பது ஒருதலைப்பட்சமான எண்ண. இதை நாம் அழிக்க வேண்டும். இதே கேள்வியை ஏன் ஒரு நடிகரிடம் கேட்கப்படுவதில்லை. சினிமாவில் ஒருவராக நாங்களும் திகழ கடினமாக உழைத்துள்ளோம் என்று கூறியுள்ளார்.

Advertisement
Advertisement