இயக்குனர் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். இந்த படத்தில் காளி வெங்கட், சந்தோஷ் வேல்முருகன், பிரசன்னா பாலச்சந்தர் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். ராசி அழகப்பன் எழுதிய சைக்கிள் சிறுகதையை மையமாக வைத்து இந்த படத்தை இயக்குனர் எடுத்திருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:

படத்தில் 1980களில் நடக்கும் கதை. சேலம் அருகே உள்ள ஒரு சிறிய கிராமத்தில் 5 சிறுவர்கள் கோடை விடுமுறையில் சைக்கிள் ஓட்டி கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அந்த காலகட்டத்தில் சைக்கிள் சொந்தமாக வைத்திருப்பதெல்லாம் பெரிய விஷயம். அப்போது அந்த ஐந்து சிறுவர்களில் ஒருவர் சொந்தமாக சைக்கிள் வாங்குகிறார். அதை பார்த்து மற்ற மூன்று சிறுவர்களும் அவருடன் சேர்ந்து கொள்கிறார்கள்.

Advertisement

மாரியப்பன் என்ற சிறுவன் மட்டும் சைக்கிளை வாடகைக்கு எடுத்து ஓட்டி பழகுகிறார். அந்த கிராமத்தில் மிலிட்டரி என்பவர் தான் சைக்கிளை வாடைக்கு விடுகிறார். அவரிடம் இருந்து தான் மாரியப்பன் சைக்கிளை வாங்கினார். ஆனால், அவர் வாங்கும் சைக்கிளில் ஓட்டும்போது கால் எட்டவில்லை. இதனால் குரங்கு பெடல் போட்டு ஓட்டுகிறார் மாரியப்பன்.

இந்த விஷயம் தன்னுடைய அப்பா காளி வெங்கட்டுக்கு தெரியாமல் மாரியப்பன் செய்கிறார். இது சைக்கிள் ஓட்டுவதற்கு மட்டுமில்லாமல் வேறு சில காரணங்களுக்காக செய்கிறார் மாரியப்பன். காரணம் மாரியப்பன் உடைய அப்பாவிற்கு சைக்கிள் ஓட்ட தெரியாது. இதனால் அப்பாவுக்கு தெரிந்தால் கோபப்பட்டு பிரச்சனை வரும் என்று பார்க்கிறார்.

Advertisement

இப்படி இருந்தும் காளி வெங்கடுக்கு உண்மை தெரிய வருகிறது. அதற்குப் பிறகு என்ன நடந்தது? மாரியப்பன் அந்த பிரச்சினைகள் எல்லாம் எப்படி எதிர் கொண்டார்? என்பதே படத்தின் மீதி கதை. குழந்தைகள் கண்டு மகிழும் வகையில் இயக்குனர் இந்த படத்தை கொடுத்து இருக்கிறார். ஐந்து சிறுவர்களுமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அதில் சந்தோஷ் என்ற சிறுவன் மாரியப்பன் கதாபாத்திரத்தில் மிரட்டி இருக்கிறார் என்று சொல்லலாம்.

Advertisement

காளி வெங்கட்டின் நடிப்பும் அற்புதமாக இருக்கிறது. தற்போது இருக்கும் காலகட்டத்தில் குழந்தைகள் செல்போன், டேப் என்று இருக்கும்போது அந்த காலகட்டத்தில் விடுமுறையில் சைக்கிள் ஓட்டியும், விளையாடியும் தங்களுடைய விடுமுறைகளை கொண்டாடினார்கள் என்பதை இயக்குனர் காண்பித்து இருக்கிறார். ஒரு சிறப்பான மெசேஜை கொடுத்திருக்கிறார். மொத்தத்தில் குரங்கு பெடல் குழந்தைகளுக்கான படம்.

நிறை:

சிறுவர்களின் நடிப்பு சிறப்பு

கதைக்களம் நன்றாக இருக்கிறது

ஒளிப்பதிவு பின்னனி இசை படத்திற்கு பக்க பலம்

அருமையான மெசேஜ்

குறை:

கதைக்களம் நன்றாக இருந்தாலும் பிரபல நடிகர்களை வைத்து எடுத்து இருக்கலாம்

முதல் பாதி பொறுமையாக செல்கிறது

பாடல்கள் பெரிதாக ஒர்க் அவுட் ஆகவில்லை

மொத்தத்தில் குரங்கு பெடல் – குழந்தைகளுக்கான படம்

Advertisement