நடிகை தன்யா ரவிச்சந்திரனுக்கு திருமணம் நடக்க இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகைகளில் ஒருவராக தன்யா ரவிச்சந்திரன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை தன்யா அவர்கள் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த பலே வெள்ளையத் தேவா என்ற படத்தின் மூலம் தான் ஹீரோனியாக சினிமா உலகில் அறிமுகமாகியிருந்தார்.

அதை அடுத்து இவர் ராதா மோகன் இயக்கத்தில் பிருந்தாவனம் என்ற படத்தில் நடித்தார். அதனை தொடர்ந்து விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த கருப்பன் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தன்யா நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் தான் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்கும் பிரபலமும் கிடைத்தது. அதைத்தொடர்ந்து இவர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகியிருந்த நெஞ்சுக்கு நீதி என்ற படத்தில் நடித்திருந்தார்.
தன்யா குறித்த தகவல்:
அதற்குப்பின் சிபிராஜ் நடிப்பில் மாயோன், ரவி மோகன் நடிப்பில் அகிலன், அர்ஜுன் தாஸ் நடிப்பில் ரசவாதி போன்ற பல படங்களில் நடித்திருந்தார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு போன்ற பிறமொழிப் படங்களிலுமே நடித்து வருகிறார். அந்த வகையில் சிரஞ்சீவி நடிப்பில் வெளிவந்த காட்ஃபாதர் என்ற படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தன்யா நடித்திருந்தார். அதற்குப்பின் கடந்த ஆண்டு கிருத்திகா உதயநிதி இயக்கிய பேப்பர் ராக்கெட் என்ற வெப் தொடரிலும் கதாநாயகியாக தன்யா நடித்திருந்தார்.

தன்யா படங்கள்:
தற்போது இவர் ரெட்ட தல என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை இயக்குனர் திருமுருகன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் அருண் விஜய், சித்தி இத்தானி உட்பட பலர் நடிக்கிறார்கள். இது தவிர இன்னும் சில படங்களில் தன்யா கமிட் ஆகி நடித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் நடிகை தன்யாவிற்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அதாவது, இவர் கௌதம் ஜார்ஜ் என்பவரை தான் திருமணம் செய்திருக்கிறார்.

தன்யா காதலன்:
இவர்கள் இருவருமே நீண்ட காலமாக காதலித்து வந்திருக்கிறார்கள். கௌதம் ஜார்ஜ் சினிமாவில் பிரபல ஒளிப்பதிவாளராக இருக்கிறார். இவர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த அனபெல் சேதுபதி படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருந்தார். அதற்குப்பின் இவர் சமீபத்தில் பாவனா நடித்த தீ டோர் என்ற படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருந்தார். தற்போது இவர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகி வரும் பென்ஸ் படத்தில் ஒளிப்பதிளராக பணிவாற்றி வருகிறார்.

தன்யா நிச்சயதார்த்தம்:
இதற்கிடையில் கௌதம் ஜார்ஜ்- தன்யா இருவருமே காதலித்து வந்திருக்கிறார்கள். தற்போது இரு வீட்டாரின் சம்மதத்தோடு இவர்களின் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருக்கிறது. கூடிய விரைவில் இவர்களுடைய திருமணம் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக கௌதம் சார்ஜுடன் லிப் கிஸ் எடுத்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாவில் பதிவிட்ட தன்யா, ஒரு முத்தம் ஒரு வாக்குறுதிக்கு தான். என்றென்றும் எப்போதும் என்னுடைய கௌதம் ஜார்ஜ் என்று பெயரை குறிப்பிட்டு ஹார்ட்டின் இமோஜை பதிவிட்டு இருக்கிறார். இதை பார்த்து பலரும் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.






