ரஜினி படத்திற்காக லுக்கை மாற்றினாரா த்ரிஷா.! இப்படியா செய்வது.? வைரலாகும் புகைப்படம்

0
920
Rajini
- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தது வந்த நடிகை த்ரிஷா, இடையில் கொஞ்சம் பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வந்தார். இந்நிலையில் நீண்ட இடைவேளைக்கு பின்னர் இவரது நடிப்பில் வெளியாகியுள்ள ’69’ என்ற படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேர இருக்கிறார் நடிகை த்ரிஷா.

-விளம்பரம்-

trisha

- Advertisement -

‘காலா’, ‘2.0’, படங்களுக்குப் பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த். இந்தப் படத்தை சன் பிக்சர் நிறுவனம் தயாரிக்கிறது, அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார். மேலும்,இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக முதன்முறையாக நடிகை த்ரிஷா இணைந்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் தனது நீளமான முடியை குறைத்து குட்டையான ஹேர் ஸ்டைலில் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை த்ரிஷா. மேலும், அந்த பதிவில் ”ஒரு பெண் தனது முடியை கட் செய்தால், அது அவரது வாழக்கையை மற்ற போகிறது என்று அர்த்தம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

-விளம்பரம்-

இந்த கெட்டப்பில் திரிஷாவை பார்த்த ரசிகர்கள் ரஜினியுடன் நடிக்கவிருக்கும் புதிய படத்திற்காக தான் நடிகை த்ரிஷா இந்த புது விதமான ஹேர் ஸ்டைலை வைத்திருக்கிறாரா என்று பலரும் சந்தேகித்து வருகின்றனர். அதே போல நடிகை த்ரிஷா தற்போது நடித்து வரும் ‘குற்றப்பயிற்சி’ படத்திற்காக தான் இந்த கெட்டப்பை வைத்துள்ளார் என்று ஒரு சிலரும் கூறி வருகின்றனர்.

Advertisement