இரண்டாம் கணவர், 46வயதில் பெற்ற மகன் மற்றும் முதல் கணவருக்கு பிறந்த மகளுடன் ஊர்வசி – இவரின் முதல் கணவர் இந்த நடிகர் தான்.

0
1476
- Advertisement -

முதன் முதலாக தனது மகளின் புகைப்படத்தை நடிகை ஊர்வசி வெளியிட்டு இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஊர்வசி. இவருடைய இயற்பெயர் கவிதா ரஞ்சனி. இவர் திரை உலகிற்காக ஊர்வசி என்று மாற்றிக் கொண்டார். இயக்குனர் பாக்யராஜின் முந்தானை முடிச்சு படத்தின் மூலம் தான் ஊர்வசி தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார்.

-விளம்பரம்-

அதனைத் தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து இருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் கதாநாயகி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றி நகைச்சுவையும் செய்யலாம் என்பதை நிரூபித்தவர் ஊர்வசி. மேலும், இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து இருக்கிறார்.

- Advertisement -

ஊர்வசி திரைப்பயணம்:

இப்படி புகழின் உச்சத்தில் ஊர்வசி இருந்தாலும் சொந்த வாழ்க்கையில் பல பிரச்சினைகளை சந்தித்திருந்தார். நடிகை ஊர்வசி அவர்கள் முதலில் மலையாள நடிகர் மனோஜ் என்பவரை 2000-ம் ஆண்டு திருமணம் செய்து இருந்தார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும்(குஞ்சட்டா) இருக்கிறது. எட்டு வருடங்கள் தான் இவர்கள் சேர்ந்து வாழ்ந்தனர். பின் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். பின் மகளை தன்னுடன் வைத்துக் கொள்ள அனுமதிக்குமாறு எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஊர்வசி வழக்கு தொடர்ந்திருந்தார்.

ஊர்வசி மறுமணம்:

விசாரணையில் ஊர்வசி எப்போதும் மது போதையில் இருப்பவர் அவரை நம்பி மகளை எப்படி ஒப்படைப்பது? என கணவர் மனோஜ் குற்றம்சாட்டி இருந்தார். பிறகு முடிவில் தன்னுடைய மகள் தந்தை உடனே சென்று விட்டார். அதுமட்டும் இல்லாமல் ஊர்வசியின் சகோதரியும் நடிகையுமான கல்பனாவின் இறப்பு ஊர்வசியை வெகுவாக பாதித்து இருந்தது. இதனால் ஊர்வசி மன வேதனையில் இருந்தார். அதன் பின் ஊர்வசி அந்த மனக் காயங்களில் இருந்து மீண்டு வந்து மறுமணம் செய்து குடும்பம்,கேரியர் என்று சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.

-விளம்பரம்-

ஊர்வசி நடித்த படம்:

ஊர்வசி அவர்கள் சிவபிரசாத் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். தன்னுடைய 46 வயதில் இவர் ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகி இருந்தார். தற்போது படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்று ஊர்வசி பிசியாக இருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் ஊர்வசி நடித்திருந்த படம் அப்பத்தா. இந்த படத்தை இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் அமித் பார்கவ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

ஊர்வசி மகளின் புகைப்படம்:

இது ஊர்வசியின் 700 ஆவது படம். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருக்கிறது. இந்த நிலையில் ஊர்வசி தன்னுடைய மகள், மகன் மற்றும் கணவர் ஆகிய அனைவரிடமும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சோசியல் மீடியாவில் ஷேர் செய்திருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் அடுத்த கதாநாயகி ரெடி. ஊர்வசியின் மகள் அழகாக இருக்கிறார். நீங்கள் நடிக்க வருவீர்களா? என்றெல்லாம் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Advertisement