பணம் கேட்டு மிரட்டுகிறார்கள் - ட்விட்டரில் புலம்பிய நடிகை. போலீஸ் எடுத்த நடவடிக்கை.
ஹிந்தி திரையுலகில் 2013-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் 'சிங் ஷாப் தி கிரேட்'. இந்த படத்தினை இயக்குநர் அணில் ஷர்மா இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக பிரபல பாலிவுட் நடிகர் சன்னி தியோல் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக நடிகை ஊர்வசி ரவுத்தேலா நடித்திருந்தார். இது தான் நடிகை ஊர்வசி ரவுத்தேலா ஹீரோயினாக அறிமுகமான முதல் ஹிந்தி திரைப்படமாம். இதனைத் தொடர்ந்து கன்னட திரையுலகில் என்ட்ரியானார் நடிகை ஊர்வசி ரவுத்தேலா. அங்கு 'Mr. ஐராவதா' என்ற படத்தில் நடித்தார். ஏ.பி. அர்ஜுன் இயக்கிய அந்த படத்தில் கதையின் நாயகனாக தர்ஷன் நடித்திருந்தார்.
அதன் பிறகு கன்னட படங்களில் நடிக்கும் வாய்ப்பு நடிகை ஊர்வசி ரவுத்தேலாவிற்கு வரவில்லை. அவரின் கால்ஷீட் டைரியில் அடுத்தடுத்து குவிந்தது ஹிந்தி படங்கள் மட்டுமே. ஹிந்தியில் 'சனம் ரே, கிரேட் கிராண்ட் மஸ்தி, ஹேட் ஸ்டோரி 4' ஆகிய படங்களில் நடித்தார் ஊர்வசி ரவுத்தேலா. இதுமட்டுமின்றி, 'பாக் ஜானி, காபில்' ஆகிய இரண்டு ஹிந்தி படங்களிலும் மற்றும் 'பாரோபைசின்' என்ற பெங்காலி படத்திலும் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியிருந்தார் நடிகை ஊர்வசி ரவுத்தேலா.
இதையும் பாருங்க : தமன்னா ஜாடையில் இருக்கும் அவரது அண்ணன். அவரே பதிவிட்ட பழைய புகைப்படம்.
இவரது நடிப்பில் கடைசியாக வெளி வந்த ஹிந்தி திரைப்படம் 'பகல் பண்டி'. கடந்த 2019-ஆம் ஆண்டு வந்த இந்த படத்தினை இயக்குநர் அனீஸ் பஸ்மி இயக்கியிருந்தார். இதில் நடிகை ஊர்வசி ரவுத்தேலாவுடன் இணைந்து அணில் கபூர், ஜான் அப்ரகாம், இலியானா, அர்சாத் வர்சி ஆகியோர் நடித்திருந்தனர். இப்போது, 'விர்ஜின் பானுப்ரியா' என்ற ஒரு ஹிந்தி திரைப்படம் மட்டும் கைவசம் வைத்திருக்கிறார் நடிகை ஊர்வசி ரவுத்தேலா.
https://twitter.com/UrvashiRautela/status/1253747830356766721
இந்த படத்தினை இயக்குநர் அஜய் லோகன் இயக்கியிருக்கிறார். இப்படம் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. இந்நிலையில், நடிகை ஊர்வசி ரவுத்தேலா சமூக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருந்தார். அந்த பதிவில் "எனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தை ஹேக் செய்து விட்டார்கள். ஆகையால், எனது ஐடியில் இருந்து வரும் மெசேஜிற்கு யாரும் பதில் அனுப்ப வேண்டாம்" என்று தெரிவித்திருந்தார்.
https://twitter.com/MumbaiPolice/status/1253770603766505473
இதனைத் தொடர்ந்து மும்பை போலீஸ் டீம் தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் "உங்களுடைய புகாரை சைபர் க்ரைம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பியுள்ளோம்" என்று நடிகை ஊர்வசி ரவுத்தேலாவின் ஸ்டேட்டஸுக்கு பதில் கூறியிருந்தனர். தற்போது, அவர்களின் ட்வீட்டிற்கு நன்றி சொன்ன ஊர்வசி ரவுத்தேலா "இப்போது அந்த ஹேக்கர் என்னிடம் நிறைய பணம் கேட்கிறார்" என்று பதிவிட்டிருக்கிறார்.