தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார் நடிகை தம்மனா. இவர் 2005 ஆம் ஆண்டு இந்தியில் வெளிவந்த சாந்த் சே ரோசன் செகரா என்னும் படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானார். பின் கடந்த 2006 ஆம் ஆண்டு ரவி கிருஷ்ணா நடித்த ‘கேடி’ என்ற படத்தில் தமன்னா அவர்கள் வில்லியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பரிட்சயமானார். அதன் பின் பாலாஜி சக்திவேல் இயக்கிய “கல்லூரி” என்ற படத்தில் ஒரு அருமையான கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
இதனை தொடர்ந்து நடிகை தமன்னா அவர்கள் பல படங்களில் நடித்து உள்ளார். தமிழில் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என அனைத்து முன்னணி நடிகர்களுடன் படத்திலும் நடித்து உள்ளார். தெலுங்கில் வெளியான “பாகுபலி” படத்தின் மூலம் தான் நடிகை தம்மனாவிற்கு சினிமா மார்க்கெட் கூடியது என்று சொல்லலாம். மேலும், தமன்னாவிற்கு தமிழை விட தெலுங்கில் தான் மார்க்கெட் அதிகம்.
இதையும் பாருங்க : சர்ச்சை கருத்து, முடுக்கப்ட ட்விட்டர் கணக்கு, சகோதரிக்கு ஆதரவு தெரிவித்த கங்கனா மீதும் வழக்கு.
தற்போது நடிகை தமன்னா அவர்கள் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சமீப காலமாகவே இவர் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தான் தேர்ந்து எடுத்து நடித்து வருகிறார். கடந்த ஆண்டு தெலுங்கில் சிரஞ்சீவியின் நடிப்பில் வெளிவந்த “சைரா நரசிம்ம ரெட்டி” என்ற படத்தில் தமன்னா அவர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
பின் தற்போது தமன்னா அவர்கள் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது சமூக வலைத்தளங்களில் நடிகை தமன்னா ஒரு நபருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்து பல விதமாக கமெண்ட் தெரிவித்து வருகிறார்கள்.
அதிலும் ஒரு சில பேர் ஒருவேளை இது தமன்னாவின் காதலானாக இருப்பாரோ?? என்று கூட கேட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நடிகை தமன்னா அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் இதற்கு பதிலளித்துள்ளார். மேலும், தமன்னா அவர்கள் இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த நபர் வேறு யாரும் இல்லைங்க தமன்னாவின் மூத்த அண்ணன் தான்.
இதையும் பாருங்க : 19 ஆண்டுகள் கழித்து இயக்குனர் அவதாரம் எடுக்கும் ராமராஜன். ஹீரோ யார் தெரியுமா?
அவருடைய பெயர் ஆனந்த். அவர் அமெரிக்காவில் டாக்டராக பணியாற்றி வருகிறார். அதுமட்டும் இல்லாமல் நடிகை தமன்னா அவர்கள் தன் அண்ணன் திருமணப் புகைப்படங்களையும் சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் எல்லோரும் வாயடைத்துப் போய் உள்ளார்கள்.