சில மாதங்களுக்கு முன்பு சீனாவில் தொடங்கிய இந்த கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் குறைந்த பாடில்லை. உலகம் முழுவதும் பல நாடுகளில் பரவி லட்சக்கணக்கான உயிர்களை பறித்து வருகிறது. கொரோனா வைரஸ் தடுக்க இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. இதனால் மக்கள் அனைவரும் கவலையிலும், பயத்திலும் உள்ளார்கள். இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டு செல்கிறது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்த இக்கட்டான சூழலில் மக்கள் அனைவரும் வெளியில் செல்லாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பதால் அன்றாட உணவிற்காக கஷ்டப்பட்டு வருகிறார்கள். ஏழை எளிய மக்கள் அனைவரும் ஒருவேளை சோற்றுக்கே தவித்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிலும் வேலைக்காக வெளியூர் சென்ற மக்கள் எல்லாம் தங்களுடைய சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்து வந்தனர்.

Advertisement

இதற்கு அரசாங்கம் சிறப்பு ரயில்களை அமைத்து அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்து வருகிறது. இந்நிலையில் அப்படி புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பிரபல நடிகை வரலட்சுமி அவர்கள் தனது தாயுடன் இணைந்து சமூக சேவை செய்துள்ளார். ஆரம்பத்திலிருந்தே நடிகை வரலட்சுமி அவர்கள் பல உதவிகளை செய்துள்ளார். தற்போது ரயிலில் பயணித்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு உண்ண ரொட்டி பாக்கெட்டுகளை வழங்கி வருகிறார். அவர் ரொட்டி வழங்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 2000 புலம்பெயர் தொழிலாளர்கள்நேற்று (ஜூலை 9) சென்னையிலிருந்து அவர்களது சொந்த ஊருக்குக் கிளம்பினர். அவர்களுக்குத் தேவையான உணவு, தண்ணீர், முகக்கவசம் மற்றும் மருத்துவப் பொருட்கள் என அவர்கள் ஊர் சென்று சேரும் வரை அவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை இன்று நடிகை வரலட்சுமி சரத்குமார் வழங்கினார்.

Advertisement
Advertisement