படு ஸ்லிம்மாக மாறிய வரலக்ஷ்மி – பாவாடை தாவணியில் கொடுத்த லேட்டஸ்ட் போஸ்.

0
1802
Varalakshmi
- Advertisement -

பாலிவுடை போல தமிழ் சினிமா உலகிலும் காலம் காலமாக தங்களுடைய வாரிசுகளை சினிமாவில் நடிக்க வைப்பதை வழக்கமாக கொண்டு உள்ளார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான சரத்குமாரின் மகள் தான் நடிகை வரலட்சுமி சரத்குமார். இவர் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருகிறார். தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த ‘போடா போடி’ படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதன் பின்னர் இவர் பல்வேறு படத்தில் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-

மேலும், விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்திலும் மற்றும் விஷால் நடிப்பில் வெளியான சண்டைக்கோழி படத்தில் வில்லியாக கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார். இதனைத் தொடர்ந்து கன்னடத்தில் சுதீப்பின் ‘மாணிக்யா’ மற்றும் மலையாளத்தில் ‘மெகா ஸ்டார்’ மம்மூட்டியின் ‘கசபா’ என இரண்டு படங்களில் நடித்தார் வரலக்ஷ்மி சரத்குமார். அதன் பிறகு தமிழில் சசிக்குமாரின் ‘தாரை தப்பட்டை’, ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் ‘விக்ரம் வேதா’, ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுனின் ‘நிபுணன்’, சிபிராஜின் ‘சத்யா’, கெளதம் கார்த்திக்கின் ‘Mr. சந்திரமௌலி’, சத்யராஜின் ‘எச்சரிக்கை’, விஷாலின் ‘சண்டக்கோழி 2’, ‘தளபதி’ விஜய்யின் ‘சர்கார்’, தனுஷின் ‘மாரி 2’, ஜெய்யின் ‘நீயா 2’ என அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார் வரலக்ஷ்மி சரத்குமார்.

- Advertisement -

தமிழ், கன்னடம் மற்றும் மலையாளத் திரையுலகுடன் தனது திரைப் பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்த நடிகை வரலக்ஷ்மி சரத்குமார், அடுத்ததாக தெலுங்கு திரையுலகில் நுழையலாம் என முடிவெடுத்தார். கடந்த 2019-ஆம் ஆண்டு வெளி வந்த தெலுங்கு திரைப்படம் ‘தெனாலி ராமகிருஷ்ணா BA.BL’. இதில் கதையின் நாயகனாக சந்தீப் கிஷன் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக ஹன்ஷிகா மோத்வானி டூயட் பாடி ஆடியிருந்தார்.இந்த படத்தில் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் வலம் வந்திருந்தார் வரலக்ஷ்மி சரத்குமார்.

இதனை தொடர்ந்து தெலுங்கிலும்பல படங்கள் நடிக்கிறார்.தற்பொழுது, நடிகை வரலக்ஷ்மி நடிப்பில் பம்பன், சேசிங், கலர்ஸ் உள்ளிட்ட திரைப்படங்கள் உருவாகி வருகிறது. இவர் நடிக ஆரம்பித்தப்போதே உடல் இடை சற்று கூடி கொஞ்சம் குண்டாகத்தான் இருந்தார். இப்படி ஒரு நிலையில் தற்பொழுது உடல் இடையை குறைத்து ஸ்லிம்மாக இருக்கும் வரலக்ஷ்மி பதிவிட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரளாகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement