வரலட்சுமி போட்ட ‘தல’ ட்வீட். கடுப்பான அஜித் ரசிகர்கள். காரணம் இதுதான்.

0
2290
varalakshmi

தமிழ் சினிமாவில் தல என்றால் அது அஜித் குமார் தான் என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான். ரஜினி கமல் தலைமுறையை தொடர்ந்து தற்போது விஜய் அஜித் தான் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக திகழ்ந்து வருகிறார்கள். மற்ற நடிகர்களுக்கு வட்டம் இருப்பது போன்று அஜித்துக்கும் தல என்ற பட்டம் இருக்கிறது. ஆனால்,இந்த பட்டத்தை வேறு யாராவது குறிப்பிட்டால் அஜித் ரசிகர்கள் உடனே பொங்கி எழுந்து விடுவார்கள்.அந்த வகையில் வரலட்சுமி இந்திய கிரிக்கெட் வீரர் தோனி தல என்று குறிப்பிட்டதால் அஜித் ரசிகர்கள் கொஞ்சம் கடுப்பில் ஆழ்ந்துள்ளார்கள்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரும், அரசியல்வாதியுமான சரத்குமாரின் மகள் தான் நடிகை வரலட்சுமி சரத்குமார். தமிழில் சிம்பு நடித்த ‘போடா போடி’ படத்தின் மூலம் தான் வரலக்ஷ்மி சினிமா உலகில் அறிமுகமானார். பின்னர் இவர் தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, சர்க்கார், சண்டக்கோழி 2, மாரி 2 போன்ற பல்வேறு படத்தில் நடித்துள்ளார். மேலும், இவர் விஜயுடன் நசித்திருந்தாலும் அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பு இன்னும் கை கூடவில்லை.

- Advertisement -

சமீப காலமாகவே பிரபலங்களுக்கு பிறந்தநாள் நாள் என்றால் Common Dp வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் ஜூலை 7 ஆம் தேதி பிறந்தநாளை கொண்டாட உள்ள தோனிக்கு, அவரது ரசிகர்கள் common dp ஒன்றை வெளியிட்ன்னர். அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த நடிகை வரலக்ஷ்மி, “எங்கள் சொந்த ThalaDhoni டி.பியைத் தொடங்குவதில் உற்சாகமாக இருக்கிறேன்.. நான் ThalaDhoni பெரிய ரசிகை என்பது அனைவருக்கும் தெரியும்.

ajith-varalaxmi-comment

இந்த ஆண்டு #IPL2020-இல் அவரைத் தவறவிட்டோம், ஆனால் அவர் மீண்டும் களமிறங்குவார் என்று நான் நம்புகிறேன். Haappyyyy Bdayyyy” என்று தெரிவித்திருந்தார். சினிமாவில் தல என்றால் அஜித் என்பதை போல கிரிக்கெட் தல என்றால் தோனி என்று அனைவரும் குறிப்பிட்டு வருகின்றனர். மேலும் தோனியை தல என்று குறிப்பிட்டு பல்வேறு பதிவுகளும் வலைத்தளங்களில் பரவி வருகின்றது. இந்த நிலையில் நடிகை வரலக்ஷ்மியும் தோனியை ‘தல’ என்று குறிப்பிட்டுள்ளது அஜித் ரசிகர்களை கொஞ்சம் கடுப்பில் ஆழ்த்தியுள்ளது.

-விளம்பரம்-
Advertisement