உடல் எடை குறைத்தும் நீச்சல் உடையில் ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட வித்யூ லேகா.

By Rajkumar · 25/7/2021

தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர் நடிகைகள் வாரிசுகள் தற்போது நடிகர்களாகவும், நடிகைகளாகவும் ஜொலித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை வித்யு லேகாவும் ஒருவர். இவர் பிரபல நடிகர் மோகன் ராமனின் மகளாவார். இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியான “நீதானே என் பொன் வசந்தம் “படத்தில் சமந்தாவுக்கு தோழியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வித்யூ லேகா. இந்த படத்தை தொடர்ந்து தீயா வேலை செய்யணும் குமாரு, ஜில்லா, வீரம், காக்கிச்சட்டை, மாஸ் என்று பல்வேறு தமிழ் படங்களில் நடித்திருக்கிறார்.

https://twitter.com/chettyrajubhai/status/1419304502994247681

இவர் பப்ளியான லுக்கில் தனது காமெடியால் பலரையும் வெகுவாக ஈர்த்தது. இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான பஞ்சு மிட்டாய் என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் இவரை தமிழில் எந்த படத்திலும் காண முடிவதில்லை. இருப்பினும் அம்மணி தெலுங்கு சினிமாவில் படு பிசியாக நடித்து வருகிறார். கடந்த ஆண்டு மட்டும் தெலுங்கில் 6 படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பாருங்க : காதல் படத்தில் வந்த இந்த நடிகரை ஞாபம் இருக்கா ? சார்பட்டா படத்துல நோட் பண்ணீங்களா இவர.

சினிமா உலகில் நுழையும் போது நடிகை வித்யு லேகா பப்ளியாக தான் இருந்தார். பின் தனது உடல் எடையை குறைத்து பிட்டான உடலில் வலம் வரவேண்டும் என ஆசைப்பட்ட வித்யுலேகா உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறினார். சமீபத்தில் தான் இவருக்கு திருமணமும் நடைபெற்றது. இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வித்யூ லேகா, 20 கிலோ குறைத்திருக்கிறேன்.

ஆனால் இன்னமும் எனது புகைப்படங்களின் கீழ் எனது உடல் எடையை வைத்து பலரும் உருவ கேலி செய்து வருகின்றனர். என்னை பன்றி என்றும், நான் நடனம் ஆடும்போது நிலநடுக்கம் ஏற்படுகிறது என்றும் பேசுகின்றனர் என்று வேதனையாக பேசி இருந்தார். இந்த நிலையில் இவர் நீச்சல் உடையில் ரீல்ஸ் செய்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

behindtalkies AMP · Quick view
View full