காதல் படத்தில் வந்த இந்த நடிகரை ஞாபம் இருக்கா ? சார்பட்டா படத்துல நோட் பண்ணீங்களா இவர.

0
36487
- Advertisement -

ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள சார்பட்டா பரம்பரை திரைப்படம் கடந்த 22 ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகி இருந்தது. ஆர்யா, துஷாரா, விஜயன், பசுபதி, அனுபமா குமார், சஞ்சனா நடராஜன், கலையரசன், ஜான் கொக்கன், சந்தோஷ் பிரதாப், ஜான் விஜய், ஷபீர் கல்லராக்கல், மாறன் என்று பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்த உள்ளார். வெளிநாட்டின் முரட்டு விளையாட்டான குத்து சண்டை விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது.

-விளம்பரம்-

இந்த படத்தில் ஆர்யாவை தவிர்த்து பல நடிகர்களின் கதாபாத்திரமும் மிக சிறப்பான பாராட்டுகளை பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக டான்சிங் ரோசாக வந்த நடிகர் ஷபீர், டாடியாக வந்த ஜான் விஜய், ரங்கன் வாத்தியாராக வந்த பசுபதி ஆகியோரின் கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்து உள்ளது.

இதையும் பாருங்க : 8 மாதத்தில் உடலை பிட்டாக மாற்றியுள்ள சீரியல் நடிகர் அமீத் – என்ன ஒரு Transformation

- Advertisement -

அதே போல் இந்த படத்தில் பல ஜூனியர் ஆர்ட்டிஸ்களுக்கு வாய்ப்பு கொடுத்து உள்ளார் ரஞ்சித். அந்த வகையில் காதல் திரைப்படத்தில் நடித்த இவருக்கும் சார்பட்டா படம் ஒரு பெரிய கம் பேக் திரைப்படமாக அமைந்து இருக்கிறது. காதல் திரைப்படத்தில் உடான்ஸ் இயக்குனரிடம் வாய்ப்பு கேட்டு இருவர் செல்வார்கள் நினைவு இருக்கிறதா.

அதில் நடிச்சா ஹீரோ சார் என்று சொன்ன நடிகர் விருச்சககாந்த் என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஸ்ரீராம் சமீபத்தில் தான் உயிரிழந்தார். இதே காட்சியில் வில்லனாக வாய்ப்பு கேட்டு நடித்த இந்த நடிகர் காதல் படத்திற்க்கு பின்னர் என்னவானார் என்பதே தெரியவில்லை. தற்போது பல வருட இடைவேளைக்கு பின் சார்பட்டா படத்தில் நடித்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement