சைமன் சீமான், அசிங்கமா இல்லையா? சீமானை வறுத்தெடுத்த பிரண்ட்ஸ் பட நடிகை. வீடியோ இதோ.

0
5814
Vijayalakshmi
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் விஜய், சூர்யா நடிப்பில் வெளிவந்த பிரண்ட்ஸ் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் விஜயலட்சுமி. இவர் சீமான் இயக்கிய வாழ்த்துக்கள் படத்திலும் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து தமிழ், கன்னடம் என பல மொழிகளில் நடித்து வந்தார். இவர் தமிழில் கடைசியாக ஆர்யா நடிப்பில் வெளிவந்த பாஸ் என்கிற பாஸ்கரன் என்ற படத்தில் தான் நடித்திருந்தார். பின் கன்னட மொழிகளில் கவனம் செலுத்தி வந்தார். தற்போது அங்கேயும் பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் தமிழ்நாட்டுக்கே வந்து விட்டார். சமீபத்தில் கூட நடிகை விஜயலக்ஷ்மி சீமான் தன்னை மூன்று வருடமாக காதலித்து விட்டு திருமணம் செய்து கொள்ள தற்போது மறுக்கிறார் என்று புகார் செய்திருந்தார்.

-விளம்பரம்-
Image result for தஞ்சை கோவிலில் சீமான்

- Advertisement -

அந்த புகாரில் தன்னுடன் சீமான் குடும்பம் நடத்தியதாக பல ஆதாரங்களை வைத்து உள்ளதாக கூறி இருந்தார் நடிகை விஜயலட்சுமி. பின் சீமானுடன் இருந்த வீடியோக்களையும் இவர் வெளியிட்டு இருந்தார். ஆனால், அந்த பிரச்சனை நாள் போகப்போக மறைந்து விட்டது. இந்நிலையில் தஞ்சை பெரிய கோயிலுக்கு சென்று சிவபெருமானை வழிபாடு செய்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை வெளுத்து வாங்கிய நடிகை விஜயலட்சுமி. தற்போது சமூக வலைத்தளங்களில் நடிகை விஜயலட்சுமி பேசிய வீடியோ வைரலாக பரவி வருகிறது. அதில் அவர் கூறியது, நாம் தமிழர் கட்சி சீமான் தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்று லிங்கம் முன்னாடி வழிபாடு செய்து உள்ளார்.

அதை விட ஒரு பெரிய அசிங்கம் அவருக்கு வேற எதுவுமே இருக்க முடியாது. நான் ஒரு விஷயத்தை எல்லாருக்கும் நினைவுபடுத்த விரும்புகிறேன். சீமான் அவர்கள் முதலில் நான் பெரியார் பாதையில் தான் செல்பவன் என்று சொன்னவர். அவர் சிவபெருமான் ஒரு பறையன், பார்வதி பரச்சி என்று அசிங்கப்படுத்தினார். ஆனால்,தற்போது சிவபெருமானை வழிபட்டு உள்ளார். சமீபத்தில் கூட லிங்க வழிபாடு குறித்து அசிங்கமாக பேசி இருந்தார். அது என்னவென்றால், லிங்கம் என்பது ஒரு ஆண் உறுப்பு. அது தெரியாம பெண்கள் எல்லாம் பால் அபிஷேகம், பூஜை எல்லாம் செய்கிறார்கள் என்று கேவலமாக பேசியிருந்தார். இப்படி சிவபெருமானையும், இந்து மதத்தையும் தவறாக மேடையில் பேசிய சீமானுக்கு தஞ்சை பெரிய கோவிலில் சிவபெருமானை வழிபாடு செய்ய சிறப்பு பூஜைகளாம்.

-விளம்பரம்-

"சைமன் சீமான்" நீங்க ஒரு கிறிஸ்டியன்.. தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலுக்கு போக உங்களுக்கு எந்த அருகதையும் கிடையாது! அண்ணன் சீமானை வெளுத்து வாங்கிய நடிகை விஜயலட்சுமி..

அரசியல் தெளிவோம் ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಶುಕ್ರವಾರ, ಫೆಬ್ರವರಿ 7, 2020

வாழ்த்துக்கள் படத்தில் நடித்த போது நான் நெற்றியில் விபூதி பூசி வந்ததற்கு கிண்டல் செய்திருந்தீர்கள். இப்போது நீங்களே விபூதி பூசிக்கொண்டு இருப்பது எந்த வகையில் சரி. சிவன் வழிபாடு செய்ததற்கு என்னை நீங்கள் நிறைய துன்புறுத்தி இருக்கிறீர்கள். பெரியார் கொள்கை என்றால் எந்த கடவுள் நம்பிக்கையும் இல்லாமல் வழிபடுவது தான். நீங்கள் பெரியார் கொள்கை வழிபடுவதால் நீங்க பெரியாரை தானே வழிபடவேண்டும். எதுக்கு சம்பந்தமே இல்லாமல் நான் முருக பக்தன் என்று சொல்லுகிறீகள்.

நீங்கள் தமிழகத்தை ஆள வேண்டும் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் பேசுவீர்கள், என்ன வேண்டுமானாலும் செவீர்களா? சமூக வலைத்தளங்களில் சிவபெருமானைப் பற்றியும், இந்து மதத்தைப் பற்றியும் எவ்வளவு கொச்சைப்படுத்தி பேசி உள்ளவரை நீங்க சிவன் முன்னாடி நிக்க வைத்து மரியாதை செலுத்துகிறீர்கள். தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில் இருக்கிற சாமிகள் இப்படி ஒரு பாவியை கோயிலில் அனுமதித்து பூஜை செய்து இருக்கிறீர்கள். உங்களுக்கு தப்பாக தெரியலையா? என்று சீமானை சகட்டு மேனிக்கு திட்டித் தீர்த்தார் நடிகை விஜயலக்ஷ்மி.

Advertisement