நீங்க டம்மியா முடிவு எடுக்க முடியாம அடிமை வேலை பாக்கற பிக் பாஸும் – கமலை வெளுத்து வாங்கிய பிரபல நடிகை.

0
2361
kamal
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியை வைத்து கமலை விமர்சித்த எடப்பாடி பழனி சாமிக்கு நடிகர் கமல் பதிலடி கொடுத்திருந்ததற்கு தற்போது பிரபல நடிகை எடப்பாடியின் கருத்திற்கு ஆதரவாக கமலுக்கு பதிலடி கொடுத்துள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கடந்த டிசம்பர் 17 ஆம் தேதி அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தை முடித்துவிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார் எடப்பாடி பழனிசாமி. அப்போது அரசு எப்படியோ அந்த வழியாகத்தான் அதிகாரிகளும் என கமல் விமர்சித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

-விளம்பரம்-

பின்னர் இதற்கு பதில் அளித்த அவர், அவர் புதிதாக கட்சியைத் தொடங்கியுள்ளார். ரிடையர்டு ஆகி வந்துள்ளார். அவருக்கு என்ன தெரியும்? 70 வயதாகிறது. 70 வயதில் பிக் பாஸ் நடத்திக் கொண்டிருக்கிறார். பிக் பாஸ் நடத்துபவர்கள் அரசியல் செய்தால் எப்படி இருக்கும்? இதைப் பார்த்தால் ஊரிலுள்ள ஒரு குடும்பம்கூட நன்றாக இருக்காது.அவரெல்லாம் நாட்டு மக்களுக்கு நன்மை செய்வதாக இல்லை. நன்றாக இருக்கும் குடும்பத்தைக் கெடுப்பதுதான் அவருடைய வேலை. அந்த டிவி தொடரைப் பார்த்தால் குழந்தைகளும் கெட்டுவிடும், நன்றாக உள்ள குடும்பமும் கெட்டுவிடும்.

- Advertisement -

எம்ஜிஆர் சினிமா மூலம் நல்ல செய்திகளைச் சொல்லி, நல்ல பாடல்களைப் பாடியுள்ளார். இவர் ஒரு படத்திலாவது நாட்டு மக்களுக்கு நன்மை செய்யக்கூடிய பாடல்களைப் பாடியுள்ளாரா? அந்தப் படத்தைப் பார்த்தால் அத்துடன் அந்தக் குடும்பம் காலியாகிவிடும், அதுபோன்ற படங்களில் தான் நடிக்கின்றனர்.எனவே, அவர் சொல்லும் கருத்துகளை எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் இதற்கு தன்னுடைய ஸ்டைலில் ட்விட்டரில் பதில் அளித்த கமல் ‘முதல்வரும் பிக்பாஸ் பார்க்கிறார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது’ என்று பதிவிட்டு இருந்தார்.

இஇப்படி ஒரு நிலையில் நடிகையும் ஆ தி மு க கட்சியை சேர்ந்தவருமான விந்தியா, கமல் குறித்தும் பிக் பாஸ் குறித்தும் ட்வீட் செய்துள்ளார். அதில், உங்க உத்தமவில்லன் ஊத்திமூடின படம்னு ஊருக்கே தெரியும், பாத்துதான் தெரிஞ்சுகணும்னு அவசியமில்லை, அந்த மாறிதான் நீங்க டம்மியா முடிவு எடுக்க முடியாம அடிமை வேலை பாக்கற பிக்பாஸ்ம். vijay tvக்கு viewership ஏத்தறத விட்டுட்டு உங்களை நம்பி நாசமாபோன தயாரிப்பாளர்களை வாழவைக்கிற வழி பாருங்க என்று கடுமையாக விமர்சித்து உள்ளார்.

-விளம்பரம்-
Advertisement