சாப்பாட மோந்துபாத்தீங்கல்ல Gst கொடுங்க – பங்கமாக கலாய்த்து சூரரை போற்று பட நடிகை.

0
209
vinodhini
- Advertisement -

சமீபத்தில் சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற 47-வது ஜிஎஸ்டி கவுன்சிலில் ஜிஎஸ்டி உயர்வு குறித்து சில முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல் வந்தது. அதன் பின்பு கடந்த மாதம் 18ஆம் தேதி பால் தயிர் மோர் மற்றும் லெஸ்சி போன்ற பால் சம்பந்தப்பட்ட பொருட்களுக்கு ஐந்து சதவீதம் ஜிஎஸ்டி வரி விதித்து இருந்தது மத்திய அரசு. இந்நிலையில் இதற்கு முன் பால் சம்பந்தப்பட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி இல்லாமல் இருந்ததால் திடீரென ஜிஎஸ்டி வரி விதித்ததன் மூலம் மக்களும் சமூக ஆர்வலர்களும் மத்திய அரசு எதிர்த்து தங்கள் கருத்துக்களை இணையதளத்தில் பதிவு செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-

மத்திய அரசுக்கு சலைத்தவர்கள் இல்லை நாங்கள் இன்று மாநில அரசு ஆவின் பால் லிமிடெட் பால் சம்பந்தமான பொருட்கள் பால், தயிர், மோர், லெஸ்சி போன்ற பொருட்களின் விலையை உயர்த்தி உள்ளது. இதற்கு காரணம் மத்திய அரசின் பால் பொருட்களுக்கு போடப்பட்ட ஐந்து சதவீத ஜிஎஸ்டி வரி காரணம். தனியார் பால் நிறுவனங்கள் நாங்களும் சலைத்தவர்கள் இல்லை என்று பால் மற்றும் தயிர் பாக்கெட்டுகளுக்கு ஐந்து சதவீத ஜிஎஸ்டி விலை உயர்வை போடுவதற்கு 15% விலை உயர்வு போடுகிறார்கள்.

- Advertisement -

நடிகை வினோதினி பதிவிட்ட வீடியோ :-

நடிகை வினோதினி வீடியாவில் பேசிய வசனங்கள் சாப்பீட்டீங்களா வாங்க, எப்பா பில்லை போட, என்ன சாப்பீட்டீங்க, ரசம் சாதமா, ரசத்திற்கு ஜிஸ்டி, சாதத்திற்கு ஜிஎஸ்டி, ரசத்தில் ஊற்றின நெய்க்கு ஜிஎஸ்டி, நெய்யில் கலந்த டால்டாவிற்கு ஜிஎஸ்டி, ரசத்திற்கு கடுகு தாளித்தோமே அதுக்கு ஜிஎஸ்டி போடுங்க. தாளித்த எண்ணெய்க்கு ஜிஎஸ்டி, எண்ணெய் ஊற்றப்பட்ட பாத்திரத்திற்கு ஜிஎஸ்டி, பாத்திரத்தை வைத்த ஸ்டவ்விற்கு ஜிஎஸ்டி, ஸ்டவ்விற்கு அடியில் இருக்கும் சிலிண்டருக்கு ஜிஎஸ்டி,போட்டு முடிச்சிட்டியா.

கைக்குக் ஜிஎஸ்டி :-

சார் விரலை காட்டுங்கள் 1, 2, ,3 ,4 5, 6, 7, 8, 9, 10…..ஆஹா சார் 10 விரல் வச்சிருக்காரு. 10 விரலுக்கும் ஜிஎஸ்டி போடு. என்னாது இது உங்க விரல்லா, சாப்பிட யூஸ் செய்தீர்களே. என்னாது வலது கையை மட்டும் யூஸ் செய்தீர்களா, ஏன் இலையை அட்ஜஸ்ட் செய்ய இடது கையையும் தானே யூஸ் செய்திருப்பீர்கள். என்ன ஏமாற்ற பாக்குறீங்களா, அப்பறம் அந்த மூக்குக்கு ஜிஎஸ்டி போடு. உங்கள் சுகந்திரம் என்பது உங்களோட முடிஞ்சி போச்சி.ஆமா சாப்பாட்டை எடுத்து முகர்ந்து பார்த்தீர்களே, அதுக்கும் ஜிஎஸ்டி தான்.

-விளம்பரம்-

மூச்சு காற்றுக்கு ஜிஎஸ்டி போடலனு சந்தோஷம் படு :-

அந்த மூச்சுக் காற்றுக்கு ஜிஎஸ்டி போடாம இருக்கோமேனு சந்தோஷப்படுங்க! பில் எவ்வளவு ஆச்சு RS. 10,325.35 காசுகள்! ரவுண்டா RS. 11 ஆயிரம் பில் போடுங்கள், இது அவங்க போட்ட ஜிஎஸ்டி, நாங்க போட வேண்டாமா, என்னாது காசு இல்லையா. போங்க சார் போய் கோடீஸ்வரனாய்ட்டு வாங்க, அப்பதான் வாழ முடியும். நீங்க கோடீஸ்வரனா பொறக்காதது உங்கள் தப்பு.என்னாது உழைத்து கோடீஸ்வரனாக போறீங்களா அப்பாவி உன் கிட்ட போய் பேசின பாரு போ வேலையை பாரு.3 ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுக்கிறேன் 30 நாளைக்கு போய் முக்கி முக்கி வேலையை பாரு என நடிகை வினோதினி ஜிஎஸ்டிக்கு எதிராக நகைச்சுவையின் மூலமாக நூதன முறையில் தன் எதிர்பை தெரிவித்தார்.

Advertisement