குட் பேட் அக்லி படம் தொடர்பாக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் தொடங்கி தற்போது வரை தனது உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் அஜித் நடிப்பில் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் வெளிவந்த படம் ‘விடா முயற்சி’.

இந்தப் படத்தில் அஜித்துடன் த்ரிஷா, ஜெரினா கஸான்ட்ரா, அர்ஜுன், ஆரவ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். மேலும், இப்படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நீண்ட இடைவெளிக்கு பின் இந்த படம் வந்ததால் திரையரங்குகளில் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி இருந்தார்கள். இந்த படம் மொத்தமாக 150 கோடி வரை வசூல் செய்து இருக்கிறது.
குட் பேட் அக்லி படம்:
தற்போது நடிகர் அஜித் அவர்கள் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஆதிக் ரவிசந்திரன் இயக்கி வருகிறார். கடைசியாக இவர் இயக்கிய மார்க் ஆண்டனி படம் ரசிகர்கள் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்திருந்தது. அது மட்டும் இல்லாமல் இவர் அஜித் உடைய தீவிர ரசிகர். குட் பேட் அக்லி படத்தை தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வருகிறது.

ஆதிக் ரவிச்சந்திரன் பேட்டி:
இந்த படத்தில் அஜித்துடன் திரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் ஏப்ரல் பத்தாம் தேதி திரைக்கு வர இருக்கிறது. சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய டீசர் வெளியாகியிருந்தது. அதைத்தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு தான் இந்த படத்தினுடைய ஓ ஜி சம்பவம் பாடல் வெளியாகி இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் இந்த படம் தொடர்பாக அளித்த பேட்டியில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், குட் பேட் அக்லி படத்தில் இருக்கும் மூன்று கதாபாத்திரமே அனைவருக்குள்ளுமே இருப்பது தான்.

படத்தின் டைட்டில்:
இந்த படத்திற்கான டைட்டிலை அஜித் சார் தான் கொடுத்தார். அவர் இந்த படத்திற்கான பெயரை கொடுத்தது ஒட்டுமொத்த குழுவுக்குமே சந்தோஷத்தை கொடுத்தது. அவருடைய பெயர் ரெட் டிராகன்னு தான் ஸ்கிரிப்டில் இருக்கிறது. ஆரம்பத்தில் நாங்கள் பெயர் பற்றி யோசிக்கவே இல்லை. பெயர் போடும்போது ஏகே என அவரிடம் சொன்னதுக்கு ஓகே சொன்னார். ஆனால், அது ரெட் டிராகன் தான். அது பாதுகாப்பும் கொடுக்கும், திருப்பியும் அடிக்கும்.

படத்தின் கதை:
டிராகன்னாலே பவர் தான். டெட் டிராகன் என்றால் இன்னும் பவர். அஜித் சாரோட கதாபாத்திரம் எந்த அளவுக்கு மாஸ் ஆக இருக்குமோ அதே அளவுக்கு எமோஷனலும் கலந்து இருக்கும். அந்த எமோஷனல் பாயிண்ட் தான் மொத்த கதைக்கான டிரைவ். படம் முழுக்க ஆக்சன் பண்ண முடியாது. ஃபேமிலி முழுவதும் கனெக்ட் பண்ண மாதிரியான கதை. ஒரு அப்பாவுக்கும் பையனுக்குமான இணைப்பு பற்றி இந்த படத்தில் இருக்கிறது என்று பல விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார்.






