இந்தியாவில் ஐமேக்ஸ் திரையரங்குகளில் வெளியாகாத ‘ஆதிபுருஷ்’ – என்ன காரணம் தெரியுமா ?

0
2047
- Advertisement -

பிரபாஸின் ஆதிபுரூஸ் படம் வெளியாவதில் ஏற்பட்டிருக்கும் சிக்கல் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. டோலிவுட்டில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவர் பிரபாஸ். இவர் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த வர்ஷம் என்ற திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானர். பின் இவர் நடிப்பில் வந்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அதிலும், 2015 ஆம் ஆண்டு ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி படம் இந்திய அளவில் பிரபலமானது.

-விளம்பரம்-

இந்த படத்தின் மூலம் நடிகர் பிரபாஸ் அவர்கள் தெலுங்கில் மட்டும் இல்லாமல் பிற மொழிகளிலும் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சேர்ந்தார். அதோடு இந்த படத்தின் மூலம் பான் இந்திய ஸ்டாராக பிரபாஸ் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். அதன் பின் இவர் நடிப்பில் வெளிவந்த படம் எதுவும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி அடையவில்லை. தற்போது பிரபாஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ஆதிபுருஷ். பாகுபலி படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பின்னர் பிரபாஸின் நடிப்பில் வெளிவந்த சாஹோ, ராதே பிரபாஸின் நடிப்பில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

- Advertisement -

ஆதி புருஷ் படம்:

இதனால் பிரபாஸ் மற்றும் அவரது ரசிகர்கள் அடுத்து வெளிவரவுள்ள ஆதிபுருஷ் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பை வைத்து இருந்தனர். இந்த படத்தை ஓம் ராவுத் இயக்கி இருக்கிறார். இந்த படம் இந்த மாதம் 16ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது. 3d பிளஸ் அனிமேஷன் தொழில்நுட்பத்தில் இந்த படம் உருவாகி இருக்கிறது. 500 கோடி பட்ஜெட்டில் ஃபேன் இந்திய படமாக ஆதிபுருஸ் படம் உருவாகியுள்ளதால் இந்த படமாக மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

படத்தின் டீசர்:

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் தான் வெளியாகியிருந்தது. அதேபோல் இந்த படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. பின் படக்குழுவினர் படத்தின் ரிலீஸீன் போது ஒவ்வொரு காட்சிக்கும் அனைத்து தியேட்டர்களிலும் ஆஞ்சநேயருக்காக ஒவ்வொரு இடம் காலியாக விட வேண்டும். இந்த படம் ராமாயணத்தில் வரும் அனுமனை மையப்படுத்தி இருக்கிறது. ஆகவே அனுமன் படத்தை பார்ப்பார் என்று நாங்கள் நம்புகிறோம். அதனால் படத்தை வெளியிடும் தியேட்டர்களில் அனுமனுக்காக கட்டாயம் ஒரு சீட் ஒதுக்க வேண்டும் என்று ஆதிபுரூஷ் பட குழு அறிவித்து இருக்கிறது.

-விளம்பரம்-

படம் குறித்த தகவல்:

ஹாலிவுட் நடிகர் சைப் அலிகான் ராவணன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் கன்னடம், தெலுங்கு, இந்தி, மலையாளம், தமிழ் போன்ற பல மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் படம் வெளியிடுவதில் சில பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, தற்போது ஐ மேக்ஸ் தொழில்நுட்பத்தில் படம் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. காரணம், ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் படத்தை மாற்றுவதற்கான பணிகள் இன்னும் முடிவடையவில்லை.

அதிருப்தியில் ரசிகர்கள்:

மேலும், வார்னர் பிரதர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி the flash திரைப்படமும் இதே நாளில் வெளியாக இருக்கிறது. அந்த படத்தின் ஐ மேக்ஸ் தொழில்நுட்பம் இந்தியாவில் உள்ள திரையரங்கில் ஏற்கனவே முன்பதிவு செய்திருக்கிறது. இதனால் ஆதிபுருஷ்’ ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகாது என்று தகவல் வெளியாகியுள்ளது. கிராபிக்ஸில் உருவாக்கி இருக்கும் இந்த படத்தை ஐ மேக்ஸ் வடிவில் பார்க்கும் போது சிறப்பாக இருக்கும். ஆனால், தற்போது ஆதிபுரூஸ் தயாராகவில்லை என்பது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது

Advertisement